இந்த கார் மட்டும் வந்துச்சுன்னா, டாடா, மாருதி எல்லாம் தலையில துண்ட போட்டுட்டு தான் போகனும்!
ரெனால்ட் நிறுவனம் தனது சர்வதேச பிராண்டில் உள்ள ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்தியாவில் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது. இது மார்கெட்டில் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பல கார்கள் சிறப்பாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இடத்தை பிடிக்க முடியவில்லை. குறிப்பிட்ட அளவு மார்கெட்டை பிடித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் சில ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிறுவனம் வெளியிட்ட டஸ்டர் கார் இந்தியாில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் போதிய அளவு விற்பனையாகவில்லை.

இந்நிலையில் டஸ்டர் காரின் விற்பனையை ரெனால்ட் நிறுவனம் நிறுத்தியது. இந்நிறுவனம் என்னதான் போராடினாலும் இந்தியாவில் டாடா, மாருதி, ஹூண்டாய் இடத்தை பிடிப்பது சிரமமாகவே இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் தனது சர்வதேச மாடலில் உள்ள ஒரு காரை இந்தியாவிற்குள் களம் இறக்க தயாாகி வருகிறது. சப்- காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் டஸ்டருக்கு மாற்றாக இந்த கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச மாடலில் இந்நிறுவனத்திடம் உள்ள ஆர்கனா கார் தான் இது. இந்த கார் இந்தியாவிற்குள் களம் இறங்கினால் இங்கு ஏற்கனவே சிறப்பாக விற்பனையாகி வரும் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் ரூ10 லட்சம் என்ற கேட்டகிரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனத்தின் ஆர்கனா கார் ஒரு கூப்பே ஸ்டைல் எஸ்யூவி காராகும். முன்னரே நாம் சொன்னதுபடி இது ரெனால்ட் டஸ்டர் காருக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த காரின் பரிமாணத்தைப் பொருத்தவரை மற்ற காம்பேக்ட் எஸ்யூவியை விட சற்று பெரியதாக இருக்கும் . நீளத்தை பொருத்தவரை 4.5 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2731 மிமீ ஆகும். அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸூம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் முக்கிய அம்சங்களாக எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஹெட்லைட்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டெயில் லேம்ப், சிறப்பான உட்கட்டமைப்பு என இந்த ரெனால்ட் ஆர்கனா எஸ்யூவி தற்போது இதன் போட்டிக்கு உள்ள கார்களை விட அதிக தொழிற்நுட்ப அம்சங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த செக்மெண்டிலேயே அதிகமான தொழிற்நுட்ப அம்சங்கள் கொண்ட கார் இதுவாக தான் இருக்கும்.

இந்த ரெனால்ட் ஆர்கனா காரின் இன்ஜினை பொருத்தவரை 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் இந்த காரின் சர்வதேச மார்கெட்டிலும் இருக்கிறது. இந்த இன்ஜின் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹைபிரிட் கார்களுகு்கு தற்போது மார்கெட்டில் நல்ல டிமாண்ட் இருப்பதால் இப்படியாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த கார் இந்தியா வருகை குறித்த ரெனால்ட் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த தகவல் கசிந்த தகவல் மட்டுமே. ஆனால் இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் கடும் போட்டி ஏற்படும் என்பது மட்டும் உறுதி.

மார்கெட்டில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் தற்போது டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்த கார் மார்கெட்டில் வந்தால் இந்த இரண்டு கார்களின் விற்பனையும் குறைய கூட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த கார்களுக்கு சர்வதேச தேச அளவில் கிடைத்த அங்கீகாரம் தான்.


Click it and Unblock the Notifications








