விற்பனை எங்கேயோ போய்ருச்சு... விலை இவ்ளோ கம்மியா இருந்தா இந்த காரை யாருதான் வாங்காம இருப்பா!
ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி (Renault Triber MPV) காரின் விற்பனை புதிய மைல் கல்லை எட்டியிருக்கின்றது. இந்த நிகழ்வுடன் சேர்த்து நிறுவனம் லிமிடெட் எடிசன் ட்ரைபர் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ரெனால்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ட்ரைபர் கார் மாடலும் ஒன்று. இது ஓர் எம்பிவி ரக காராகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகக் குறைவான விலைக் கொண்ட எம்பிவி கார்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இந்த காரே விற்பனையில் தற்போது புதிய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான யூனிட்டுகள் இக்கார் விற்பனையாகியிருக்கின்றது. இது ஓர் புதிய மைல்கல் சாதனை ஆகும். ட்ரைபர் ஓர் மூன்று வரி இருக்கைகள் அமைப்புக் கொண்ட கவர்ச்சியான காராகும். இதுமட்டுமின்றி இது நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த சூப்பரான ரேட்டிங்கை ட்ரைபர் பெற்றது.

இதுபோன்ற எக்கசக்க சிறப்புகளை இக்கார் கொண்டிருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே தற்போது ஒரு லட்சம் யூனிட்டிற்கு அதிகமான விற்பனை எனும் சாதனை மைல்கல்லை ட்ரைபர் நாட்டில் படைத்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இக்காரை கடந்த 2019ம் ஆண்டிலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது இந்தியாவில் ரூ. 5.76 லட்சம் என்ற ஆரம்ப விலையில் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. நான்கு விதமான தேர்வுகளில் இக்காரை ரெனால்ட் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஆர்எக்ஸ்இ (RXE), ஆர்எக்ஸ்எல் (RXL), ஆர்எக்ஸ்டி (RXT) மற்றும் ஆர்எக்ஸ்இசட் (RXZ) ஆகியவையே அவை ஆகும்.

இவற்றுடன் கூடுதல் தேர்வை வழங்கும் வகையில் தற்போது ரெனால்ட் நிறுவனம் ட்ரைபரின் சிறப்பு பதிப்பு ஒன்றை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. உயர்நிலை வேரியண்டான ஆர்எக்ஸ்டி-யிலேயே அந்த லிமிடெட் எடிசன் ட்ரைபர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இக்கார் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதற்காக எத்தனை யூனிட்டுகளை அது தயார்படுத்தியிருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

புதிய லிமிடெட் எடிசன் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காருக்கு ரூ. 7.24 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காருக்கான புக்கிங் பணிகளை நாளை முதல் நாட்டில் தொடங்க இருப்பதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ரெனால்ட் ட்ரைபர் விலைக் குறைவான எம்பிவி வாகனமாக இருந்தாலும், அதில் கவர்ச்சிக்கும், சிறப்பம்சங்களும் குறைச்சலின்றி காணப்படுகின்றது.

இவற்றைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாகவே நாளை முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கும் லிமிடெட் எடிசன் ட்ரைபர் காட்சியளிக்கின்றது. இந்த காரில் சிறப்பு அம்சமாக அகஸா ஃபேப்ரிக் இருக்கை, இரட்டை நிற டேஷ்போர்டு (கருப்பு மற்றும் பியனோ கருப்பு நிறத்தில் இது காட்சியளிக்கும்), முழு டிஜிட்டல் திறன் கொண்ட எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எச்விஏசி க்னாப்ஸ் மற்றும் கருப்பு நிற உட்பக்க டூர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர இரு நிற வெளிப்புற தோற்றம் (உதாரணம்: மூன்லைட் சில்வர் மற்றும் கருப்பு நிற ரூஃப் உடன் கூடிய செடர் பிரவுன்), 14 இன்ச் ஃப்ளெக்ஸ் வீல் உள்ளிட்ட அம்சங்கள் வெளிப்புற தோற்றத்தைக் கூடுதல் கவர்ச்சியானதாக மாற்றும் விதமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இவற்றுடன் பாதுகாப்பு அம்சமாக 4 ஏர் பேக்குகள் (முன் மற்றும் பக்கவாட்டு பகுதியில் இது அமைந்திருக்கும். டிரைவர் மற்றும் முன்பக்க பயணிக்கு இது அதிக பாதுகாப்பை வழங்கும்) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய லிமிடெட் எடிசன் ட்ரைபர் காரில் ஆறு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி ஆரம்பத்தில் ரூ. 5.30 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைத்தது. ஆனால், இப்போது பன்மடங்கு இதன் விலை உயர்ந்திருக்கின்றது. சமீப காலமாக கார் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதே காரணமாக இருக்கின்றது. இந்த காரின் விலை மட்டுமில்லைங்க இந்தியாவில் விற்பனைச் செய்யப்படும் பல நிறுவனங்களின் தங்களின் தயாரிப்புகளின் விலையை பன் மடங்கு உயர்த்தியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








