ஒரே நொடியில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்கும் ஹைப்பர் கார்! யார் தயாரிக்க போறாங்க?
ரெனிக் என்ற நிறுவனம் ஒரே நொடியில் 0-96 கீ.மீ வேகத்தை எட்டி பிடிக்கும் கார் ஒன்றைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் கீழே காணலாம்.

கார்கள் வாங்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும் சிலர் வேகமாக கார் வேண்டும் என விரும்புவார்கள். சிலர் பாதுகாப்பான கார் வேண்டும் என விரும்புவார்கள், சிலர் அதிக இடவசதி கொண்ட கார் வேண்டும் என விரும்புவார்கள். ஏன் சிலர் காரில் அதிகமான தொழிற்நுட்ப வசதிகள் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

ஆனால் ஹைப்பர் கார் அல்லது சூப்பர் கார் என்றால் அதன் பிக்கப் தான் மிகவும் முக்கியம் அதாவது எவ்வளவு அதிகமாக வேகத்தை எவ்வளவு குறைவான நேரத்தில் எட்டி பிடிக்கிறதோ அதைத் தான் பிக்கப் எனச் சொல்லுவார்கள். இந்த ரக கார்களுக்கு பிக்கப் என்பது முக்கியம். கார்கள் வேகமாக விரைவாகச் செல்ல வேண்டும் என்பதற்காக மிக அதிக பவர்ஃபுல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதற்காகப் பல தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

இப்படியாக ஹைப்பர் கார்களுக்கான இன்ஜின்களை டிசைன செய்யும் நிறுவனம் ரிமேக் இன்ஜினீர். இந்நிறுவனம் புகட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ள க்ரோயாடியான் என்ற நிறுவனத்திற்காக வேலை செய்கிறது. இந்நிறுவனம் அதிக பிக்கப் கொண்ட இன்ஜினை ஏற்கனவே தயார் செய்திருந்தது. இந்நிறுவனம் 1.85 நொடியில் 0-96 கிமீ வேகத்தை பிக்கப் செய்யும் இன்ஜினை தயாரித்திருந்தது.

இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் இதே வேகத்தை பிக்கப் செய்யும் வகையில் இன்ஜினை தயார் செய்ய முடியும் என கூறியுள்ளது. இந்த இன்ஜினை வெறும் கான்செப்ட் காராக மட்டும் இல்லாமல் புரோடெக்ஷன் காராகவும் தயாரிக்க தற்போது சாத்தியம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அப்படி இந்நிறுவனம் தயாரித்தால் உலகிலேயே அதிக பிக்கப் கொண்ட கார் இதுவாக தான் இருக்கும்.

இந்நிறுவனம் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் என்று தான் சொல்லியுள்ளதே தவிர எவ்வளவு நேரம் எனச் சொல்லவில்லை. தற்போது இதற்கான திட்டம் வெறும் ஆய்வு பேப்பராக மட்டுமே உள்ளது. இதை செயல்வடிவத்திற்குக் கொண்டு வரும் போது தான். இந்த இன்ஜின் எவ்வளவு நேரத்தில் இந்த வேகத்தை எட்டுகிறது என்பதை துல்லியமாக்கக் கணக்கிட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த வேகம் டிராக் ரேஸ்களில் ஸ்லிங்க்ஸ் மூலம் இந்த வேகம் சாத்தியம் ஆகும். ஆனால் இந்நிறுவனம் தயாரிக்கவுள்ள இன்ஜின் ரேஸ் டிராக் மட்டுமல்ல சாலைகளிலும் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அது சாத்தியமானால் அது உண்மையில் மிகப்பெரிய சாதனையாகவே அமையும்.

இந்த இன்ஜினிற்கு நிவேரா என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இது குறித்துச் சொல்லும் போது இந்த இன்ஜின் வெறும் பிக்கப்பை மட்டும் மனதில் வைத்து உருவாக்கவில்லை. இது செயல்வடிவம் பெறும் போது ஆட்டோமொபைல் துறைக்கே பல புதுமையான விஷயங்கள் அறிமுகமாகும். எதிர்காலத்தையே மாற்றப்போகும் விஷயமாக அவை இருக்கும் என கூறுகிறது.


Click it and Unblock the Notifications








