டீசல் கார் வைத்திருக்கிறீர்களா? 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகிப் போக வாய்ப்பு...

டீசல் கார்கள் குறித்த ஆய்வு ஒன்று டில்லியில் நடந்தது. அதில் வந்த முடிவுகள் டீசல் ஓனர்களை அதிகம் பயப்பட வைத்துள்ளது. இதுகுறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

இந்தியாவில் வாகனங்கள் வெளியிடும் மாசு என்பது தற்போது மிக முக்கியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் காற்று மாசு உலகம் முழுவதும் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காற்று மாசு அதிகம் வெளியிடும் வாகனங்கள் சாலையில் இயங்குவதைத் தடுக்க அரசு பல்வேறு புதிய புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. வாகனங்களைப் பொருத்தவரை காற்று மாசுவை அதிகம் வெளியிடும் வாகனம் பெட்ரோலை விட டீசல் வாகனம் தான்.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

இது குறித்து டில்லி டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழக என்விராய்மெண்டல் இன்ஜினியரிங் துறையின் துணைப் பேராசிரியர் ராஜீவ் குமார் மிஷ்ரா சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தினார். இந்த ஆய்வின் முடிவுகளை அவர் ஸ்பிரிங்கர் என்விராய்மெண்டல் சயின்ஸ் அண்ட் போலியூஷன் ரிசர்ச் ஜர்னலில் வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வின் முடிவுகளைப் பலரைத் திடுக்கிட வைத்துள்ளது. இதில் அவர் சொன்ன விஷயங்களுக்கு முன்பு முதலில் இந்த ஆய்வு குறித்துக் காணலாம்.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

இந்த ஆய்வு டில்லியில் பல்வேறு ஆர்டிஓக்களில் பதிவு செய்யப்பட்ட 460 டீசல் கார்களின் தரவுகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் சொன்ன தகவல்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ராஜீவ் குமார் மிஷ்ரா, தனது குழுவினருடன் சேர்ந்து செய்தார். நேரடியாக காரின் உரிமையாளர்களைச் சந்தித்து அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

இந்த ஆய்வின் முடிவில் அவர் கூறுவது டில்லியில் இயங்கும் டீசல் கார்கள் சராசரியாக அவர்கள் வாங்கி 7.5 ஆண்டுகளில் 95,000 கி.மீ ஓடும் வரை பிஎஸ் 4 எமிஷன் நாம்ஸ்க்கு ஏற்றவாறு இருக்கிறது. ஆனால் அதே கார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 1.25 லட்சம் கி.மீ ஓடிய பிறகு பிஎஸ் 3 நாம்ஸ்க்கு வந்து விடுகிறது. எனத் தெரியவந்துள்ளது. இது தான் சராசரியான தரவுகளாக இருக்கிறது.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

டீசல் கார்களை பொறுத்தவரை 10 ஆண்டுகள் ஸ்கிராப் காலமாக இருக்கிறது. அதாவது புதிதாக கார் வாங்கிய ஒருவர் அதை 10 ஆண்டுகள் வரை தான் பயன்படுத்த முடியும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கார் காற்று மாசு அதிகம் வெளியிடும் காராக மாறிவிடும். இதனால் அந்த காருக்கான புகை சான்று வாங்க வேண்டியது அவசியம். புகை சான்று பெற முடியாத வண்டிகளை ஸ்கிராப்பிற்கு தான் போட வேண்டும்.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

அரசு 10 ஆண்டு என இதற்கு ஒரு இலக்கு வைத்திருக்கிறது. ஆனால் இந்த ஆய்வில் பேராசிரியருக்குக் கிடைத்த முடிவு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டீசல் கார்கள் எல்லாம் அந்த தகுதியை இழந்து விடுகிறது எனக் கூறுகிறார். அதாவது பிஎஸ் 3க்கு எமிஷன் நாம்ஸ்க்கு ஒத்து வராத வாகனங்களுக்கு புகைச்சான்று கிடையாது. அந்த ரக வாகனங்கள் சாலையில் இயங்கவே அனுமதி கிடையாது.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

ஆனால் இது எல்லாம் கார் பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான். ஆனால் டில்லியில் அவர் செய்த ஆய்வில் பெரும்பாலான வாகனங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே அந்த தகுதியை இழந்துவிடுகின்றன. இதனால் காற்று மாசு எதிர்பார்த்ததை விட அதிகம் ஏற்படுகிறது.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

டில்லியில் தற்போது 9லட்சம் டீசல் வாகனங்கள் இயங்கி வருகிறது. டில்லியில் ஓடும் வாகனங்கள் கட்டாயம் பிஎஸ் 4 நாம்ஸ் படி மட்டுமே இயங்க வேண்டும் என விதிமுறை உள்ளது பிஎஸ் 3 வாகனங்கள் இயங்க தடை உள்ளது. பிஎஸ் 4 என்றால் புகைவெளியாவதில் ஒரு வாகனத்திற்கு 50 HSU (Hartridge Smoke Units)

அளவு இருக்க வேண்டும், பிஎஸ் 3 என்றால் 65 HSU வரையிருக்கலாம்.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

டில்லியில் தற்போது பிஎஸ் 3 கார் ஒட்டு மொத்த டீசல் கார்களில் 5-8 சதவீதம் மட்டுமே இருக்கிறது. டில்லியில் தற்போது கார் ஸ்கிராப்பிங் பாலிசியை காரின் மைலேஜை கணக்கிட்டு மாற்றியமைத்துள்ளனர். ஆனால் இந்த டீசல் கார் அதிக காற்று மாசுவை வெளியிடுவது அந்தகாரின் ஓனரின் பராமரிப்பைப் பொறுத்து மாறுவதாக ராஜீவ் குமார் மிஸ்ராவுன் இணைந்து ஆய்வு செய்த அபிநவ் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார்.

டீசல் கார் வைத்திருக்கிறீர்களா . . . 10 வருசத்துக்கு முன்னாடியே பாடாவதியாகப் போக வாய்ப்பு . . .

சரியான இன்ஜின் டியூனிங், சரியான கால இடைவெளியில் சர்வீஸ், புகைவெளியிடுவது குறித்து ஆய்வு, மற்றும் அதற்கான கண்ட்ரோல்சிஸ்டம், எனப் பல விஷயங்கள் காற்று மாசு ஏற்படுத்துவதைத் தடுக்க காரணமாக இருக்கும் சில கார்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகும் பிஎஸ் 4 எமிஷன் நாம்ஸ்க்குசரியாக இருக்கிறது என இந்த ஆய்வில் தரவுகள் உள்ளன. இந்த ஆய்வு குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்

Article Published On: Sunday, September 4, 2022, 9:12 [IST]
English summary
Research says that diesel cars become non compliance before the scrapping age
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+