எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி அல்லது எல்பிஜி கிட்-களைக் கொண்டு வாகனத்தை மாடிஃபை செய்வதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் மிக மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் காரணத்தினால் வெகு விரைவில் இதன் விலைகள் இன்னும் பல அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. இந்த விலைவாசி உயர்வை சமாளிக்கும் பொருட்டு மக்கள் மின் வாகனம், சிஎன்ஜி (CNG), ஆட்டோ எல்பிஜி (Auto LPG) ஆகிய வாகனங்களின் பயன்பாட்டிற்கு அதிகளவில் மாற தொடங்கியிருக்கின்றனர்.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

ஒரு சிலர் தங்களின் வழக்கமான வாகனங்களை சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகியவற்றில் இயங்கும் வாகனங்களாக மாற்றத் தொடங்கியிருக்கின்றனர். இவை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைக் காட்டிலும் மலிவு விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவை வழங்கக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

ஒரு முறை செலவு செய்தால் பல நாள் அதிக பலனை அனுபவிக்கக் கூடும் என்கிற காரணத்தினால் மக்கள் இவ்வாறு செய்கின்றனர். இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் அவை பெரியளவில் மாசுப்படுத்தாது. இதுபோன்ற எண்ணற்ற காரணங்களினாலேயே மக்கள் மத்தியில் அவை பிரபாலமானதாக காட்சியளிக்கின்றன.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

இதனால்தான் மக்கள் பலர் ஆஃப்டர் மார்க்கெட் சந்தை கிட்-களைப் பயன்படுத்தி தங்களின் வாகனங்களை எல்பிஜி அல்லது சிஎன்ஜி வாகனங்களாக மாற்றத் தொடங்கியிருக்கின்றனர். ஆஃப்டர் மார்க்கெட்டில் இவை மிக மிக மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

அதே நேரத்தில், சில வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிஎன்ஜி கிட்களுடன் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன. இருப்பினும், சந்தைக்கு பிறகான சிஎன்ஜி கிட்-களுக்கே மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

அவை, மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைப்பதால் மக்கள் அவற்றைப் பயன்படுத்தியே தங்களின் வாகனங்களை மாற்றிக் கொள்கின்றனர். இதுபோன்று, கம்பெனியால் வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் எஞ்ஜினை மாற்றுவது எரிபொருள் விலைவாசி உயர்வில் இருந்து வேண்டுமானால் நம்மை பாதுகாக்கலாம். ஆனால், காப்பீடு விஷயத்தில் அது சில சிக்கல்களை வழங்கும். இதற்கான தீர்வை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

ஆர்டிஓ ஒப்புதல்:

ஒரு பெட்ரோல் அல்லது டீசல் வாகனம் சிஎன்ஜி அல்லது ஆட்டோ எல்பிஜி கிட் மூலம் மாடிஃபை செய்யப்பட்டால், அந்த வாகனத்திற்கு மாநில போக்குவரத்துத் துறையிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும். அதாவது, பதிவு சான்றிதழில் மாற்றம் குறித்து தகவல்களை வழங்கி, அதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே அது சாலையில் இயங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட வாகனமாக கருதப்படும்.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

இதைத் தவறும்பட்சத்தில் எதிர்காலத்தில் காவல்துறையால் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். ஆகையால், எல்பிஜி அல்லது சிஎன்ஜி கிட்டாக மாற்றப்பட்டதற்கான ஆவணம் (இன்வாய்ஸ் பில்), ஆர்சி புக், இன்சூரன்ஸ் சான்றின் நகல், கேஒய்சி உள்ளிட்டவற்றை ஆர்டிஓ-விடம் சமர்பிக்க வேண்டும். இத்துடன், ஆர்டிஓ வழங்கும் ஓர் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பின்னரே ஆர்டிஓ ஊழியர்கள் ரெட்ரோஃ-பிட் செய்யப்பட்ட வாகனத்தை ஆராய்ந்து அதனை அங்கீகரிப்பர்.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதல்:

ஆர்சி புக்-ல மாற்றத்தை செஞ்சிட்டோம். இதோட எல்லாம் முடிஞ்சுதுனு நினைச்சுடாதீங்க. காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து நாம் ஒப்புதலை பெற வேண்டும். சிஎன்ஜி அல்லது ஆட்டோ எல்பிஜி கிட்டால் மாடிஃபை செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் செல்ஃப் அட்டஸ்ட் செய்யப்பட்ட சில ஆவணங்களைக் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும்.

எல்பிஜி-சிஎன்ஜி கிட்டை பொருத்துவதனால் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரச்னை ஏற்படுமா? இதோ முழு விபரம்!

ஆர்சி புத்தகம், சிஎன்ஜி அல்லது ஆட்டோ எல்பிஜி கிட்டால் அலங்கரிக்கப்பட்டதற்கான இன்வாய்ஸ் நகல் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்திலேயே எதிர்காலத்தில் எந்த சிக்கலுமின்றி காப்பீட்டு க்ளைமை செய்து கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 16, 2022, 11:06 [IST]
English summary
Retro fitted lpg cng kit cause a problem in the insurance policy
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+