மின்னல் வேகத்தில் சீறிப் பாய்கிறது உலகின் வேகமான எலெக்ட்ரிக் கார்! விலை எவ்வளவு தெரியுமா?
இன்று ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மோகம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த ரிமாக் என்ற நிறுவனம் உலகின் வேகமான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
குரேஷியா நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ரிமேக். இந்நிறுவனம் நீவிரா என்ற எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை உருவாக்கியுள்ளது. இந்த கார்கள் தான் உலகிலேயே வேகமாக பயணிக்கும் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. இந்த காரின் வேகம் ஜெர்மனி நாட்டில் உள்ள பாப்பென்பெர்க் டிராக்கில் டெஸ்ட் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமை சோதனை மற்றும் மேம்பாட்டுத் துறை டிரைவர் மிரோ ஸிரேன்ஸிவிக் என்பவர் டெஸ்ட் செய்து பார்த்தார்.

இந்த டிராக்கில் சுமார் 4 கி.மீ நீளம் உள்ள 2 ரோடுகள் இருக்கிறது. இங்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது இந்த கார் அதிகபட்சமாக 412 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்தது. உலகில் உள்ள எலெக்ட்ரிக் கார்கள் எதுவும் இதுவரை இவ்வளவு வேகத்தை எட்டி பிடித்ததில்லை. இதற்கு முன்பாக அஸ்பார்க் அவுல் என்ற கார் 249 கி.மீ வேகத்தில் சென்றதே எலெக்ட்ரிக் காரில் அதிகபட்ச வேகமாக இருந்தது.
தற்போது ரிமேக் நிவேரா கார் அதையும் தாண்டி 412 கி.மீ வேகத்தை எட்டி பிடித்துள்ளது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரிமேக் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ16.55 கோடி என்விலையில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளதாக ரிமேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.அது மட்டுமல்ல இதே போல மொத்தமே 150 கார்களை தான் இந்நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் இதை ஒரு லிமிடெட்ட எடிசன் காராக மட்டுமே வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த கார் வேகத்தில் சிறந்த காராக இருப்பதால் 0-100 கி.மீ வேகத்தை இந்த கார் வெறும் 1.95 நொடிகளில் எட்டி பிடித்துவிடுகிறது. இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வரும் போது அதிகபட்சமாக 352 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லும் படி இந்த காரின் வேகம் லிமிட் செய்யப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த காரின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை இதன் டிசைன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் பெரிய கிரில் போன்ற அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இன் பானட் பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ரூஃப் லைன் ஸ்லோப்பிங் ரூஃப் லைனாக வழங்கப்பட்டுள்ளது. எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் டெயில் லைட் எல்இடி டெயில் லைட்களாக உள்ளது. மேலும் இந்த காரில் ஆக்டிவ் விங் மற்றும் டிஆர்எல்களுடன் கூடிய ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் குறைந்த எடை கொண்ட ஸ்போர்டி ஃபோர்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் மோட்டாரை பொருத்தவரை 4 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது 1,914 எச்பி பவரை வெளிப்படுத்தும், 2360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த கார் முழு சார்ஜில் 489 கி.மீ பயணிக்கும் திறன் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் எலெக்ட்ரிக் காரில் தான் உலகின் அதிவேக காராக இருக்கிறது. ஆனால் இதைவிட வேகமாகச் செல்லும் இன்டர்நெல் கம்பஷன் இன்ஜின் கார் இருக்கிறது. புகாட்டி நிறுவனத்தின் சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300+ என்ற தான் உலகிலேயே அதிக வேகத்தில் பயணிக்கும் காராக இருக்கிறது. இந்த கார் மணிக்கு 489 கி.மீ வேகத்தில் பயணிக்கும் எனக் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் செய்யப்பட்டது. இதே போல கோயினிங்ஸ்எக் மற்றும் எஸ்எஸ்சி டியாடாரா ஆகிய நிறுவனங்களும் வேகமாகப் பயணிக்கும் காரை உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications








