ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்! இந்த விலை அவங்களுக்கு அசால்டு, ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

நடிகை ஜெனிலியா மிக மிக விலையுயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருந்த நடிகைகளில் ஜெனிலியாவும் ஒருவர். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரிதிஷ் தேஷ்முக்கை மணந்த பின்னர் அவர் மும்பையில் செட்டில் ஆகினார். இந்த ஜோடிகளே குடும்பத்துடன் சென்று ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த காரை தற்போது வாங்கியிருக்கின்றார்.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

நடிகை ஜெனிலியாவைப் போல் செம்ம ஃபேமஸான ஆக்டரே அவரின் கணவர் ரிதிஷ் தேஷ்முக். இந்தி திரையுலகில் தனக்கென ஓர் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கி வைத்திருக்கின்றார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பல ரோல்களை அவர் மேற்கொண்டு வருகின்றார். இவருக்கும் நடிகை ஜெனிலியாவுக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

இந்த தம்பதியினருக்கு ரியான் மற்றும் ரஹில் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக சென்றே தங்களுக்கான புதிய சொகுசு காரை டெலிவரி எடுத்திருக்கின்றனர். குடும்பத்தினர் தங்களுக்கான புதிய சொகுசு காராக வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX) வாகனமாகும். இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். இந்த காரின் மதிப்பு ரூ. 1.4 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

இத்தகைய விலையுயர்ந்த எலெக்ட்ரிக் சொகுசு காரையே ஜெனிலியா -ரித்திஷ் தம்பதியினர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிக சமீபத்தில் வாங்கியிருக்கின்றனர். இந்த காரிலேயே பிரபல இந்திய நடிகர்களான அர்பிதா மற்றும் ஆயுஷ் ஆகியோரின் இல்லத்திற்கு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக அவர்கள் சென்றிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட படங்களே சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

இந்த படங்களின் வாயிலாகவே ரித்திஷ் -ஜெனிலியா தம்பதியினரின் இந்த விலையுயர்ந்த கொள்முதல் பற்றிய தகவலும் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. நடப்பாண்டின் தொடக்கத்தில் ரிதிஷ் தேஷ்முக்கின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ஜெனிலியா, அவருக்கு இந்தியாவில் விற்பனையிலேயே இல்லாத ஓர் சொகுசு காரை ஸ்பெஷலாக இறக்குமதி செய்து பரிசளித்தார்.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரையே அவர் பரிசளித்தார். இதன் மதிப்பு ரூ. 55 லட்சம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதிக ஆடம்பர வசதிகள் கொண்டதே இந்த மின்சார காராகும். இந்த காரைத் தொடர்ந்தே தற்போது லேட்டஸ்டாக பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரையும் இந்த தம்பதியினர் வாங்கியிருக்கின்றனர்.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

இதன் வாயிலாக அவர்களின் வீட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரின் டிசைன் நவீன காலத்திற்கு ஏற்றதாக உள்ளது. இத்துடன், அதில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் வேற லெவல் நவீன யுகத்தை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

கடந்த 2018ம் ஆண்டு ஐநெக்ஸ்ட் கான்செப்ட் மாடலாக இந்த கார் பொது பார்வைக்கு உட்படுத்தப்பட்டது. இதுவே தற்போது உலக சந்தையில் ஐஎக்ஸ் எனும் பெயரில் பல்வேறு தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் இதன் ஐடிரைவ் 40 என்ற வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் 76.6kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரியையே ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் 425 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

இந்த எலெக்ட்ரிக் காரில் இரண்டு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்து வீல்களையும் இயங்க செய்யும். ஆம், இந்த எலெக்ட்ரிக் கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த மின் மோட்டார்கள் 326 எச்பி பவரையும், 630 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், வெறும் 6.1 செகண்டிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இந்த கார் கொண்டிருக்கின்றது.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும். உலக நாடுகளில் கூடுதலாக ஐடிரைவ் 50 என்ற தேர்வு விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இது அதிக செயல்திறன் மிக்க வேரியண்டாகும். இந்த சொகுசு எலெக்ட்ரிக் காரில் 14.9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், மெமரி மற்றும் மசாஜ் வசதி கொண்ட சொகுசு இருக்கைகள், ஹெட்ஸ்-அப் திரை, 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நடிகை ஜெனிலியா வாங்கிய எலெக்ட்ரிக் கார்... இந்த விலை அவங்களுக்கு அசால்டுதான் ஆனா கேட்ட ரசிகர்களுக்கு மயக்கமே வந்துருச்சு!

இதுதவிர, சர்ரவுண்ட் வியூ கேமிரா, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், ரிவர்ஸ் அசிஸ்ட், 18 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களும் எலெக்ட்ரிக் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், பாதுகாப்பு அம்சங்களாக ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் இயங்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், லேன் சேஞ்ஜ் வார்னிங் சிஸ்டம், கொல்லிஷன் வார்னிங் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

Image Courtesy: Yogen Shah

More from DriveSpark

Article Published On: Friday, September 2, 2022, 18:15 [IST]
English summary
Riteish deshmukh genelia buys bmw ix here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+