ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் கார் இந்தியாவில் அறிமுகம்... விலையைக் கேட்டால் தலையே சுற்றிப் போகும்...
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை, இதில் உள்ள அம்சங்கள் வசதிகள், மற்றும் தொழிற்நுட்ப தகவல்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

நீங்கள் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் வாகனம் காட்டிக்கொடுக்கும் என்பது எந்த காருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு பொருந்தும் இந்தியாவில் வெகுசிலரே இந்த காரை வைத்திருக்கிறார்கள். ரோல்ஸ்- ராய்ஸ் மோட்டார் கார் நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாவற்றிற்குப் பயங்கரமான மவுசு உள்ளது. இந்த நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்தபடி கார்களை தயாரித்து அனுப்பும் என்பது இந்த நிறுவனத்தின் தனி ஸ்டைல் இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முதன் முறையாக முழுமையான கருப்பு நிறு காரை அறிமுகப்படுத்தி அதற்கு பிளாக் பேட்ஜ் எனபெயரிட்டுள்ளது. இந்த பிளாக் பேட்ஜ் கார் முழுவதும் தொழிற்நுட்ப ரீதியில் முன்னோடியான காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் இளம் வயதினரைக் கவரும் விதத்தில் இந்த காரை வடிவமைத்துள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே கோஸ்ட், கல்லீனன், டான் வரிசையில் இந்த காரும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற நம்பிக்கையில் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளாக் பேட்ஜ் கோஸ்ட் கார் வழக்கமான கோஸ்ட் காரின் படியுடன் உள்ளது. ஆனால் அதன் டிசைன் பிளாக் பேட்ஜ்க்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டுள்ளது

இந்த காருக்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மொத்தம் 44 ஆயிரம் கலர் ஆப்ஷன்களை கொடுத்துள்ளது. அதில் வாடிக்கையாளர் விரும்பும் கலரில் அந்நிறுவனம் அவருக்காகப் பிரத்தியேகமாகக் காரை தயாரித்து வழங்கும். இதுவரை அந்நிறுவனம் விற்பனை செய்த கோஸ்ட் காரில் பெரும்பாலான கார்கள் கருப்பு ஷேடை கொண்டுள்ளதால் இந்த பிளாக் பேட்ஜ் கோஸ்ட் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இதைச் செய்துள்ளது.

இந்த காரை தயாரிக்க பெயிண்ட் மட்டும் 45 கிலோ பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இரண்டு கோட் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. மேலும் இந்த காருக்கு கையால் பெயிண்ட் செய்யப்படும் கான்ட்ராஸ்ட் கலரிலான கோச் லைன்களை ஆப்ஷனாக வழங்குகிறது. இந்த காண்ட்ராஸ்ட் காலர் ரோஸ்ராய்ஸ் எஸ்டசி, மற்றும் கிரில் பகுதிகளுக்கும் பூசப்படும்.

இந்த காரில் 21 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்படுகிறது. இதில் வழக்கம் போல ஃபுளோட்டிங் ஹேப் கேப் இருக்கும் அதனால் வீலில்உள்ள RRலோகா வீலுடன் சேர்ந்து சுத்தாமல் எப்பொழுதும் நேராக இருக்கும். இது எல்லா ரோஸ்ராய்ஸ் கார்களிலும் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சமாகும்

இந்த காரின் உட்கட்டமைப்பைப் பொருத்தவரை வழக்கமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் செய்வதுபோல கஸ்டமைஸ்டு லாக்ஸி மெட்டரியல் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதன் உட்புறம் கார்பன் பைபரில் டீப் டைமண்ட் பேட்டர்ன் அமைப்பில் டிசைன் செய்யப்படுகிறது. இது ரெகுலர் செடானை விட ரோல்ராய்ஸை வித்தியாசப்படுத்திக்காட்டும்.

இந்த காரின் டேஷ்போர்டு போலிவியர் வீனர் கொண்டு டிசைன் செய்யப்படுகிறது. உட்புற டிசைனில் ஆங்காங்கே பிரிமியம் க்ரோம் நிற வடிவங்களும் டிசைனிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. காரின் பிரிமியம் லுக்கை வெளிக்காட்டுகிறது. இந்தகாரின் உள்ள உள்ள கடிகாரத்தில் 12,3,6,9 ஆகிய மார்க்களில் மட்டும் க்ரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வழக்கம் போல ரோஸ்ராய்ஸ் காரின் ஷூட்டிங் ஸ்டார் ஸ்டார் லைட் ஹெட்லைனர் உள்ளது.

இந்த பிளாக் பேட்ஜ் கோஸ்ட் காரை பொறுத்தவரை 6.75 லிட்டர் வி12 இன்ஜின் உடன் வருகிறது. இது 29 பிஎஸ் மற்றும் 50 என்எம் டார்க் திறனை கூடுதலாக வெளிப்படுத்தும்படி மாற்றியமைக்கப்பட்டு மொத்தமாக 600 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் உன் பிஸ்போக் கியர் பாக்ஸ் மற்றும் த்ராட்டல் ட்ரீட்மெண்ட் சேர்க்கப்பட்டு இன்ஜின் பவரை அதிகப்படுத்துகிறது.

இந்த காரை ஓட்டும் போது டிரைவர் கொடுக்கும் த்ராட்டல் மறு்ம் ஸ்டியரிங் இன்புட்களை பொருத்து அதில் பொருத்தப்பட்டுள்ள ZF 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் செல்லும் ஸ்யர்டு ஆக்ஸில்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தி டிரைவருக்கு சுலபமான டிரைவிங் அனுபவத்தை வழங்கும். இந்த ரோல் ராய்ஸ் கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரின் விலையாக இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ12.25 கோடி எனத் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த காரின் எக்ஸ் ஷோரூம்விலை அதுவல்ல. இந்த காரை புக் செய்து அதில் நமக்குத் தேவையான கஸ்டமைசேஷனை முடித்த பின்பே காரின் விலையை அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications