117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! 2021ல் மிக அதிகளவில் விற்பனையாகிய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!

உலகின் மிக உயரிய விலை கார்களை உற்பத்தி செய்து வரும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 117 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவு மிக சிறந்த விற்பனையை கடந்த 2021ம் ஆண்டில் பெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

இதை விட கொடுமையான ஓர் ஆண்டு இருக்கவே முடியாது என பலரின் வஞ்ச புகழ்ச்சிக்கு ஆளாகி இருக்கும் ஆண்டாக மாறி இருக்கின்றன 2020 மற்றும் 2021 ஆண்டுகள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளின் பெரும்பாலான மாதங்கள் முழு முடக்கத்திலேயே கடந்தன. இதன் விளைவாக மக்கள் பலர் மிகக் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2021ம் ஆண்டு தங்களுக்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்திருப்பதாக பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 இல் மிகப் பெரிய வளர்ச்சியை தங்கள் நிறுவனம் பெற்றிருப்பதாக அது கூறியுள்ளது. மிக அதிக விலைக் கொண்ட சொகுசு கார்களை விற்பனைச் செய்து வரும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமே இவ்வாறு தெரிவித்துள்ளது.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் கார்களின் விற்பனையே திக்குமுக்காடி வரும் நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

தற்போதும் பட்ஜெட் வாகன விற்பனையாளர்கள் இலக்கை எட்ட முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மிக பிரமாண்டமான விற்பனை வளர்ச்சியைப் போன வருடத்தில் பெற்றிருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக செல்வந்தர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் எந்த தயக்கமும் இன்றி கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சொகுசு கார்களை வாங்கி குவித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

தனது 117 வருட கால வரலாற்றிலேயே இல்லாத அளவிலான விற்பனையை 2021ம் ஆண்டில் பெற்றிருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்திருக்கின்றது. செமி கண்டக்டர் பற்றாக்குறை, லாக் டவுண் உள்ளிட்ட பல இக்கட்டான சூழ்நிலை கடந்த வருடத்தில் நிலவி வந்தபோதிலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் 5,586 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

இது முந்தைய 2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் 49 சதவீத அதிக விற்பனை வளர்ச்சி என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மிக உயரிய விலைக் கொண்டு தயாரிப்புகளுக்கு கிடைத்திருக்கும் இந்த அமோக விற்பனை வரவேற்பு உலக வாகன சந்தையையே ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே ஆரம்ப நிலை தேர்வான கோஸ்ட் செடான் ரக சொகுசு காருக்கே உலகளவில் நல்ல விற்பனைக்குக் கிடைத்திருக்கின்றது. ஆகையால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த தயாரிப்புகளின் விற்பனையில் இக்காரே தலைமையில் இருந்தது. இதற்கு அடுத்தபடியான இடத்தை பிளாக் பேட்ஜ் கோஸ்ட் பிடித்தது.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

ரோல்ஸ் ராய்ஸ் விற்பனையில் வரலாற்று சாதனையைப் படைக்க இந்த செடான் காரும் உதவி இருக்கின்றது. இதைத் தொடர்ந்து, கல்லினன் எஸ்யூவி மற்றும் பேந்தம் ஆகிய கார்களும் சிறந்த முறையில் விற்பனையாகி இருக்கின்றன. குறிப்பாக நிறுவனத்தின் மிக உயரிய மற்றும் மிக மிக அதிக விலைக் கொண்ட காராக கருதப்படும் பேந்தம் சொகுசு காருக்கு நல்ல விற்பனைக் கிடைத்திருப்பது தயாரிப்பாளருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

மேலும், தற்போது எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான டிமாண்ட் கிடைத்திருப்பதனால் தற்போது கார்களை பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகி இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் சிலவற்றிற்கு 2022ம் ஆண்டின் இறுதி வரை காத்திருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகியிருக்கின்றது.

117ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சிறந்த விற்பனை! எத்தனை யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையாகி இருக்கு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டண் ஆயிருவீங்க!

இந்த நிலை காரணமாக நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தற்போது முழு வீச்சில் இயங்க தொடங்கி இருக்கின்றது. குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதில் நிறுவனம் உறுதியாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இன்னும் சில புதிய தயாரிப்புகளையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ரோல்ஸ் ராய்ஸ் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் அடுத்த படைப்பு மின்சார வாகனமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Rolls royce registers highest sales numbers in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X