தலைவன் வந்துட்டான்! ரோல்ஸ் ராய்ஸின் முதல் மின்சார கார் அறிமுகம்.. இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் சிறப்பு வசதிகள் பற்றிய சுவாரஷ்ய தகவலையும், உருவாக்கம் குறித்த முக்கிய தகவல்களையுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), அதன் முதல் எலெக்ட்ரிக் காரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஸ்பெக்ட்ரே எனும் பெயரிலேயே எலெக்ட்ரிக் காரை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் வரும் 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் கட்டாயம் விற்பனைக்கு வரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

இந்த எலெக்ட்ரிக் காரை தனது கல்லினன் மற்றும் பேந்தம் ஆகிய இரு கார்களுக்கு இடையிலேயே நிறுவனம் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது, கல்லினன் சொகுசு காரை காட்டிலும் சற்று கூடுதல் லக்சூரி அம்சங்களைக் கொண்டதாகவும், பேந்தம் மாடலைக் காட்டிலும் சற்று குறைவான ஆடம்பர அம்சங்களைக் கொண்டதாகவும் ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் கார் இருக்கும் என தெரிகின்றது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

இந்த எலெக்ட்ரிக் காரை தனது அலுமினியம் ஆர்கிடெக்சர் மற்றும் புதிய ஸ்பிரிட் சாஃப்ட்வேர் ஆர்கிடெக்சர் ஆகிய தளங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், சில தனித்துவமான அம்சங்களை இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸால் வழங்க முடிந்திருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் நிறுவனம் இந்த காரை உலகின் முதல் அல்ட்ரா லக்சூரி எலெக்ட்ரிக் சூப்பர் கூபே ரக காராக உருவாக்கியிருக்கின்றது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

ஆகையால், இந்த காருக்கு சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் ஏகபோகமான டிமாண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியீடு மட்டுமே செய்யப்பட்டிருப்பதால் வாகனம் பற்றிய முழு தகவல்களும் வெளியிடப்படவில்லை. கணிசமான தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்த குறைந்த தகவல்களே பலரின் வாயை பிளக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது என்று கூறலாம்.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

அந்தவகையில், நிறுவனம் ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் காரில் 577 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மின்சார மோட்டார் வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

இதுமட்டுமில்லைங்க இக்காரில் ஓர் முழு சார்ஜில் 520 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது நல்ல ரேஞ்ஜ் திறன் ஆகும். ரேஞ்ஜ் திறனில் மட்டுமில்லைங்க ஆடம்பர அம்சங்களிலும் பிற ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் போலவே அசத்தக் கூடியதாக ஸ்பெக்ட்ரே இருக்கின்றது. மின்சார காராக இருந்தாலும் சற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு கருவிகளுக்கு குறைச்சலின்றி இந்த கார் காட்சியளிக்கின்றது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

அந்தவகையில், காரின் உட்பகுதியில் முதல் முறையாக கதவுகளிலும் ஸ்டார்லைட் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக மென்மையாக ஒளிரக் கூடிய 4,796 நட்சத்திர லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், மேற்கூரையும் மின்னும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, உட்புறத்தை மேலும் பிரீமியமானதாக மாற்றும் வகையில் அட்டகாசமான தையல் நுட்பங்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

பன்முக நிறத்தாலும், எம்பிராய்டரியாலும் இருக்கைகள் வேற லெவல் அலங்கரிக்கிற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், நிறுவனம் முன்பு தயாரித்த கார் மாடல்களைக் காட்டிலும் இது சற்று கூடுதல் அசத்தலாகவே இருக்கும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த காரின் வெளிப்புறத்தையும் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

இரு கதவு வடிவமைப்பிலேயே ஸ்பெக்ட்ரே உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், எந்த கார்களிலும் பயன்படுத்தாத ஓர் நுட்பமாக மிகப் பெரிய பாடி பேனலை ஸ்பெக்டரோவின் உருவாக்கத்திற்கு அது பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பெரிய பேனல் லக்கேஜ் பெட்டி தொடங்கி முன்பக்க ஏ பில்லர் வரையில் நீளும் வகையில் உள்ளது. இந்த அளவு பெரிய பேனலை நிறுவனம் இதுவரை உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

மற்றுமொரு சிறப்பு வசதியாக இக்காரில் 23 அங்குல வீல்களையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. ஏறதாழ நூறு ஆண்டுகளாக வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இரண்டு கதவு மற்றும் 23 அங்குல வீல் அமைப்புடன் ஓர் கூபே காரை உருவாக்குவது இதுவே முதல் முறையாகும். மேலும், இந்த காரில் புதிய தொழில்நுட்பமாக 'ஸ்பிரிட்' எனும் டிஜிட்டல் கட்டமைப்பை ரோல்ஸ் ராய்ஸ் வழங்கியிருக்கின்றது.

உலக சொகுசு கார்களின் தலைவன் வந்துட்டான்... ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகம்... இதுக்கு முன்னால மத்த இ-கார்கள் எல்லாம் தூசு!

இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் காரை தொலைதூரங்களில் இருந்து நிர்வகிக்க முடியும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக கார் பற்றிய பல்வேறு தகவல்களை இருந்த இடத்திலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இதுமாதிரியான மிக மிக சூப்பரான தயாரிப்பாக ரோல்ஸ் ராய்ஸின் முதல் எலெக்ட்ரிக் கார் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த கார் வெகு விரைவில் ஆடம்பர மின்சார வாகன உலகின் முடிசூடா மன்னனாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 19, 2022, 12:57 [IST]
English summary
Rolls royce spectre is the brands first electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+