புல்லட் ப்ரூஃப் கார் பயன்பாட்டிற்கு மாறிய பிரபல திரை நட்சத்திரம்... கொலை மிரட்டல் அதிகம் வருகிறதாம்!
பிரபல நடிகர் ஒருவர் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட காரின் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றார். அவர் யார் என்ன மாதிரியான பாதுகாப்பு நிறைந்த வாகன பயன்பாட்டிற்கு அவர் மாறியிருக்கின்றார் என்பது பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரபல நடிகர் ஒருவர் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றார். இந்தி திரையுலகைச் சேர்ந்த சல்மான் கானே புல்லட் ப்ரூஃப் காரின் பயன்பாட்டிற்கு மாறியவர் ஆவார். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரின் பயன்பாட்டிற்கு அவர் மாறியிருக்கின்றார்.
இந்த காரில் வேறு என்ன மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றது? மற்றும் இக்காரின் சிறப்பு என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மர்ம நபர்கள் சிலரால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நடிகர் சல்மான் சார்பில் கூறப்படுகின்றது. இதனை அண்மையில் அவரது வக்கீலும் உறுதிப்படுத்தினார். சல்மான் கான் சார்பாக வழக்கு ஒன்றிற்காக ஆஜரானபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார். இந்த நிலையிலேயே பாதுகாப்பு காரணமாக அவர் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட காரின் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றார்.

சல்மான் பயன்படுத்தியிருப்பது பழைய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காராகும். இது அதிக சொகுசு வசதிகள் நிறைந்த காரும்கூட. எனவேதான் அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி முன்னணி தொழிலதிபர்கள் வரை பலர் இக்காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரத்தில், டொயோட்டா நிறுவனம் இந்த காரை புல்லட் ப்ரூஃப் வசதியுடன் விற்பனைக்கு வழங்கவில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகளை வெளிச்சந்தையில் இருந்தே சல்மான் தன்னுடைய காரில் பொருத்தியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

அதேவேலையில் பிற கார் உற்பத்தி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஃபேக்டரியிலேயே ஃபிட் செய்யப்பட்ட புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதேபோல், ஆர்டரின் பேரில் மஹிந்திரா நிறுவனமும் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார்களை வடிவமைத்து வழங்குகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே தனியார் கராஜ் வாயிலாக சல்மான் கான் தன்னுடைய பழைய தலைமுறை லேண்ட் க்ரூஸர் காருக்கு புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கண்ணாடிகளை பொருத்தியிருக்கின்றார். கை துப்பாக்கி மற்றும் மெஷின் கன்னின் தோட்டாக்களின் தாக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டதாகவே கார் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது.
இத்துடன் இன்னும் சில பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் சல்மான் கான் சார்பில் வெளியிடப்படவில்லை. புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகளை கண்டறிவது மிக சுலபம். அவை வழக்கமான விண்ட் ஸ்கிரீன் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளைக் காட்டிலும் அதிக அடர்த்தியானதாக இருக்கும்.

இம்மாதிரியான அடையாளங்களைக் கொண்டே சல்மான் கான் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட காரில் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. அண்மையில், பஞ்சாப் மாநில முதலமைச்சரும் இதேபோல் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட டொயட்டா லேண்ட் க்ரூஸர் காரின் பயன்பாட்டிற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது சல்மான் கானிடத்தில் எக்கசக்கமான சொகுசு கார் பயன்பாட்டில் இருக்கின்றன. ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபையோகிராஃபி (Range Rover Autobiography), ஆடி ஆர்எஸ்7 (Audi RS7), மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 63 எஸ் (Mercedes AMG GLE 63 S), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் - கிளாஸ் (Mercedes Benz GL-Class), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes Benz S-Class), லெக்சஸ் எல்எக்ஸ் 470 (Lexus LX 470), ஆடி ஏ8 (Audi A8) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) உள்ளிட்ட சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றார்.

இவரிடத்தில் சில அரிய வகை வாகனங்களும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், சல்மான் கான் கார்களை பழக்கத்தைக் கொண்டவராக இருக்கின்றார். தன்னுடைய நடித்த மற்றும் திரை நண்பர்களுக்கு அவர் கடந்த காலங்களில் அதிகளவில் கார்களை பரிசாக வழங்கியிருக்கின்றார். கத்ரினா கைஃப் போன்ற முன்னணி திரையுலகினருக்குகூட அவர் காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

சல்மான் கான் மீது மானை வேட்டையாடிய வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கைக் காரணம் காட்டியே சில மர்ம நபர்கள் சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் சம்பந்தபட்ட லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே சல்மான் புல்லட் ப்ரூஃப் கார் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








