தரமான படத்தை எடுத்த பிஎஸ் மித்ரனுக்கு தரமான பரிசை வழங்கிய தயாரிப்பாளர்.. வாழ்நாளில் மறக்க முடியாது பரிசு!
சர்தார் திரைப்பட இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையுமே ஆச்சரியத்தில் மூழ்கச் செய்திருக்கின்றது. இந்த நிகழ்வு குறித்த கூடுதல் சுவாரஷ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார்த்திக்கின் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்தார் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகின்றது. இந்த நிலையில் இப்போது அத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கின்றது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், லக்ஷ்மன் குமாரின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த படம் கார்த்திக்கின் கேரியரிலேயே மிக சிறந்த படமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆகையால், ஏற்கனவே உச்சத்தில் இருந்த அவரது மார்க்கெட் தற்போது இன்னும் பலமடங்கு உயரத்திற்கு சென்றிருக்கின்றது. இதேபோல், பிஎஸ் மித்ரனுக்கும் தமிழ் இன்டஸ்ட்ரியில் நல்ல பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத ஓர் ஸ்பை-த்ரில்லர் படத்தை அவர் உருவாக்கியிருப்பதாக தமிழ் திரையுலகம் பிஎஸ் மித்ரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடத் தொடங்கியிருக்கின்றது.

இத்தகைய பிளாக் பஸ்டர் திரைப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குநர் மித்ரனுக்கு தயாரிப்பாளர் விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான ஃபார்ச்சூனர் காரையே பிரின்ஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் லக்ஷ்மன் பரிசாக வழங்கியிருக்கின்றார்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 எம்டி, 4x2 ஏடி, 4x4 எம்டி, 4x4 ஏடி, லெஜண்டர் 4x2 ஏடி மற்றும் லெஜண்டர் 4x4 ஏடி ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 4x2 எம்டி மற்றும் 4x2 ஏடி ஆகிய தேர்வுகளில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் தேர்வு வழங்கப்படுகின்றது. மற்ற அனைத்தும் டீசல் எஞ்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

இவற்றில் எந்த வேரியண்டை தயாரிப்பாளர் பிஎஸ் மித்ரனுக்கு பரிசாக வழங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. போதுமான அளவு சொகுசு வசதிகளையும், மிக தாராளமான தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கும் நடுநிலை தேர்வை அவர் பரிசாக வழங்கியிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது.

டொயோட்டா நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்த கார் மாடலின் விலையை உயர்த்தியது. ரூ. 66 ஆயிரம் தொடங்கி ரூ. 1.1 லட்சம் வரை விலை உயர்வை நிறுவனம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், தற்போது இக்கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 31.39 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இக்கார் மாடலின் உச்சநிலை வேரியண்ட் ரூ. 43.43 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.

இத்தகைய விலையுயர்ந்த காரையே வரவேற்புமிக்க சர்தார் திரைப்படத்தை இயக்கிய காரணத்திற்காக லக்ஷ்மன் குமார் டைரக்டர் மித்ரனுக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார். இதன் விலையைப் போலவே சொகுசு வசதிகளும் மிக அதிகமாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இக்காரில் அமர்ந்து பயணிக்கும் ஆறு பேரும் மிக தாராளமான இட வசதியுடன் பயணிக்க முடியும்.

இதுதவிர லக்சூரி அனுபவத்தை வழங்கும் அதன் கேபினும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் பொழுதுபோக்கும் இந்த காரில் மிக சிறப்பான அளவில் கிடைக்கும். இதற்காக பெரிய அளவிலான திரை உள்ளிட்ட அம்சங்கள் ஃபார்ச்சூனர் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய சூப்பரான காரை மித்ரனுக்கு பரிசளித்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் திரைப்படம் திரைக்கு வந்தது. உலகளவில் இந்த படம் 85 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகு விரைவில் 100 கோடியை அது வசூலிக்கும் என கூறப்படுகின்றது. இதைத்தாண்டியும் இப்படம் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக திரையுலக வல்லுநர்கள் யூகித்துள்ளனர். இந்த நிலையிலேயே வெற்றியைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் பரிசளிப்பு நிகழ்வை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications