ரொம்ப சந்தோஷப்பட்டோம்... ஆனா எல்லாம் வதந்தியாம்! யாருக்கும் எந்த காரும் தர போவதில்லை என அதிரடி!

அண்மையில் 2022 ஃபிபா கால்பந்து உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சவுதி அரேபியா டீம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சவுதி அரேபியா அதன் வீரர்களுக்கு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பொய் என தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லயோனல் மெஸ்ஸி போன்ற கால்பந்தாட்ட ஜாம்பவான்களைக் கொண்டதே அர்ஜென்டினா டீம். இந்த டீமையே வீழ்த்தியதனால் உலகம் போற்றும் கால்பந்தாட்ட வீரர்களாக சவுதி அரேபிய குழுவினர் மாறினர். உலக நாடுகள் அனைத்தும் அவர்களைப் பாராட்டி வரும் அதேவேலையில், தாய் நாடான சவுதி, வீரர்களுக்கு மிக மிக விலையுயர்ந்த பரிசை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 2-1 என்ற கோல் வீதத்திலேயே அர்ஜென்டினாவை சவுதி டீம் வீழ்த்தியது.

ஃபிபா கால்பந்து

இந்த வரலாற்று சாதனையை செய்ததற்கே சவுதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், புதிய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை வீரர்களுக்கு பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலே பொய்யானது என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை சவுதி கால்பந்தாட்ட குழுவின் தலைமை பயிற்சியாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றிலேயே இந்த தகவலை அவர் உறுதிப்படுத்தினார்.

விலையுயர்ந்த கார் பரிசாக வழங்கப்படுவதாக உலா வந்துக் கொண்டிருக்கும் தகவல் போலியானது என்றும், இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஓர் பல் மருத்துவர் செய்த ட்வீட்டே இந்த வதந்திக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். சில நிமிடங்களிலேயே அந்த நபர் ட்வீட்டை விளக்கிக் கொண்டாலும், ஒரு சிலர் அதனை உண்மை என நினைத்து தொடர்ச்சியாக பரப்பினர்.

இதனை சில முன்னணி ஊடகங்களும் வெளியிட்டன. இவையனைத்தும் வதந்திக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துவிட்டது. இந்த நிலையிலேயே கார் பரிசு பற்றிய தகவல் காட்டுத் தீயைபோல் உலகம் முழுவதிலும் பரவியது. ஆனால், இது உண்மை இல்லை என சவுதி மறுப்பு தெரிவித்துள்ளது. ஆகையால், கால்பந்தாட்ட ரசிகர்கள் தற்போது சோகத்தில் மூழ்க உள்ளனர். சவுதி வழங்க இருப்பதாக அறிவித்திருந்த காரின் விலை 8.99 கோடி ரூபாய் ஆகும்.

இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் II விற்பனைக்கு வந்த சில மாதங்களே ஆகின்றன. இந்த காரில் 6.75 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 241 கிமீ ஆகும்.

இந்த காரின் ஒட்டுமொத்த எடை 2745 கிலோவாகும். இந்த அளவு மிக சூப்பரான மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த காரை இந்தியாவில் அம்பானி போன்ற குறிப்பிட்ட சில செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய உச்சபட்ச விலையுயர்ந்த காரையே சவுதி அதன் வீரர்களுக்கு பரிசாக வழங்க இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த வதந்தியை அனைவரும் நம்புவதற்கு ஓர் காரணம் இருக்கின்றது.

1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பெல்ஜியத்தை எதிர்த்து நின்ற சவுதி அரேபிய டீம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி மகுடத்தைக் கைப்பற்றியது. இந்த சவுதியின் அரேபியாவின் அல்-ஓவைரான் அடித்தார். இவர் அடித்த ஒற்றை சுவுதியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆகையால், அவரைக் கொண்டாடும் விதமாக நாடு திரும்பிய பின் அல்-ஓவைரானுக்கு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த கடந்த கால நிகழ்வே நிகழ்கால வதந்திக்கு காரணமாக இருக்கின்றது. தற்போது பெற்றிருப்பது மகத்தான வெற்றியாகும். மேலும், இதற்கு முன்னதாக சவுதி அரேபியா கால்பந்தாட்ட குழு பெரியளவில் எந்த ஒரு சாதனையையும் செய்யவில்லை. இதுபோன்ற காரணத்தினாலேயே அனைவரும் இந்த வதந்தியை அதீத அளவில் நம்ப தொடங்கிவிட்டனர். ஆனால், இந்த வதந்திக்கு தற்போது சவுதி தரப்பில் இருந்து முற்று புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Saudi arabia players will not get rolls royce phantom
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X