எஸ்பிஐ வங்கிக்கு இப்படி ஒரு தாராள மனசா... நன்கொடையை வாரி வழங்கியிருக்கு...
எஸ்பிஐ வங்கி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடையாக 10 டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார்களை வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எதற்கெடுத்தாலும் கட்டணம், அதிக கட்டணம் என கட்டண வசூல் மன்னனாக இருக்கும் வங்கிகளில் எஸ்பிஐயும் ஒன்று. எந்தளவு மிக சிறப்பான சேவையை வழங்குகின்றதோ அந்தளவு கட்டணத்தையும் மிக அதிகளவில் தன்னுடைய சேமிப்புதாரர்களிடம் எஸ்பிஜை வசூல் செய்து வருகின்றது. இந்த மாதிரியான ஓர் வங்கியே தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு மற்றும் கோ கிரீன் (Go Green) திட்டத்தின்கீழ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கார்களை நன்கொடை வழங்கியிருக்கின்றது.

நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கும் அனைத்து கார்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாகும். நாடு முழுவதும் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் குறைக்கும் பொருட்டு இந்திய அரசு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், சார்ஜிங் கட்டமைப்புகளை அதிகரிக்கச் செய்தல் உள்ளிட்ட பலதரப்பட்ட செயல்களில் அரசு ஈடுபட்டு வருகின்றது.

அரசின் இந்த முயற்சியில் சில தனியார் நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையிலேயே எஸ்பிஜ-யும் தற்போது எலெக்ட்ரிக் கார்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 10 எலெக்ட்ரிக் கார்கள் கொடை அளிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துமே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மாடலாகும்.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலே டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது இரு விதமான வெர்ஷன்களில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) மற்றும் நெக்ஸான் இவி பிரைம் (Tata Nexon EV Prime) ஆகிய இரு விதமான தேர்வுகளிலே டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இத்துடன் சில சிறப்பு எடிசன்களிலும் இந்த மின்சார வாகனம் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சிறப்புமிக்க எலெக்ட்ரிக் காரின் பத்து யூனிட்டுகளையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எஸ்பிஐ தானமாக வழங்கியிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் டெல்லி எய்ம்ஸ் நிர்வாகனத்தின் மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்பட இருக்கின்றது. இத்துடன், மாசு வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியிலும் இந்த கார்கள் தங்களின் பங்களிப்பை வழங்க இருக்கின்றன.

நெக்ஸான் இவி மேக்ஸ்
டாடா விற்பனைக்கு வழங்குக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்களிலேயே அதிக ரேஞ்ஜை தரக் கூடியதாக நெக்ஸான் இவி மேக்ஸ் இருக்கின்றது. இது ஓர் முழுமையான சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜை தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 40.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், சிறந்த இயக்கத்தை வழங்கும் விதமாக 105 kW திறன் கொண்ட மின் மோட்டார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 143 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

நெக்ஸான் இவி பிரைம்
மேலே பார்த்த வெர்ஷனைக் காட்டிலும் சிறிய பேட்டரி பேக்கைக் கொண்டதாக நெக்ஸான் இவி பிரைம் இருக்கின்றது. 30.2 kWh திறன் கொண்ட லித்தியம் அயன்-பேட்டரி பேக்கே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக்காகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த காரில் சிங்க்ரோனஸ் மேக்னட் இன்டக்சன் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 129 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், ஸ்மார்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அக்செண்ட் அசிஸ்ட், ஹில் டெசன்ட் அசிஸ்ட் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பல வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி நெக்ஸான் இவி பிரைம் ரூ. 14.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், நெக்ஸான் இவி மேக்ஸ் ரூ. 18.34 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதேபோல், டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் கார் மாடலை பெட்ரோல் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.50 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பெட்ரோல் - மின்சாரம் இவை இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








