க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

ஹூண்டாய் க்ரெட்டா & வென்யூ கார்களின் சில குறிப்பிட்ட வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் அதிகளவில் எஸ்யூவி கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக ஹூண்டாய் மோட்டார்ஸ் உள்ளது. குறிப்பாக இந்த தென்கொரிய பிராண்டின் க்ரெட்டா மற்றும் வென்யூ கார்கள் பிரபலமான எஸ்யூவி மாடல்களாக விளங்குகின்றன. இதில் க்ரெட்டா ஆனது நடுத்தர-அளவு எஸ்யூவி கார் மற்றும் வென்யூ ஆனது காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

இவை இரண்டையும் மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் யூனிட்கள் ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு இவை இரண்டிற்கும் முன்பதிவுகள் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால், இவற்றை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு 6 மாதங்கள் வரையில் உள்ளது. இருப்பினும் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறையால் இந்த காத்திருப்பு காலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் எல்லா கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டு வருகிறது.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

கிட்டத்தட்ட கடந்த 1 வருடத்திற்கும் மேலாக நிலவிவரும் இந்த குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையை சமாளிக்க சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது காரின் அம்சங்களில் சிலவற்றை நீக்கியுள்ளன. குறிப்பாக, சிப்கள் அதிகம் தேவைப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு நீக்கப்படுகிறது. இதன்படி ஹூண்டாய் கடந்த ஆண்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லாத எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்டை க்ரெட்டா & வென்யூ மாடல்களில் அறிமுகப்படுத்தி இருந்தது.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

அதேநேரம், குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் விற்பனையில் உள்ள கார்களின் சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளதையும் இதற்குமுன் பார்த்துள்ளோம். இந்த வகையில் தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் க்ரெட்டா மற்றும் வென்யூ கார்களின் சில குறிப்பிட்ட வேரியண்ட்களின் தயாரிப்பை நிறுத்தி கொண்டுள்ளதாக அதன் டீலர்களிடம் அறிவித்துள்ளது.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

Source: Rushlane

இது தொடர்பாக ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஹூண்டாய் மொத்தமாக வென்யூவிற்கான 7 வேரியண்ட்களையும், க்ரெட்டாவிற்கான 2 வேரியண்ட்களையும் நீக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வென்யூவிற்கான 7 வேரியண்ட்களில் 5 வேரியண்ட்கள் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடனும், 2 வேரியண்ட்கள் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடனும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

எஸ் (O) டிசிடி, எஸ்.எக்ஸ்+ டிசிடி இரட்டை-நிறம், எஸ் (O) ஐஎம்டி, எஸ்.எக்ஸ் (O) ஐஎம்டி மற்றும் எஸ்.எக்ஸ் (O) இரட்டை-நிறம் ஐஎம்டி என்பன வென்யூவின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 5 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களாகும். நீக்கப்பட்டுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி டீசல் வேரியண்ட்களாவன எஸ் (O) மற்றும் எஸ்.எக்ஸ் (O) ஆகும்.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

அப்படியே க்ரெட்டா பக்கம் வந்தோமேயானால், இந்த காரின் எஸ்.எக்ஸ் டிசிடி மற்றும் எஸ்.எக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் தயாரிப்பை ஹூண்டாய் நிறுத்தி கொண்டுள்ளது. இதில் ஒன்று 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடனும், மற்றொன்று 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடனும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையின் காரணமாக இவ்வாறான நடவடிக்கையை ஹூண்டாய் மேற்கொண்டிருக்கலாம் என நாம் தான் கூறிக்கொண்டு வருகிறோமே தவிர்த்து, இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த விற்பனை நிறுத்தத்திற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். அதாவது, ஹூண்டாய் நிறுவனம் விரைவில் 2022ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களுடன் அதன் வென்யூ மற்றும் க்ரெட்டா கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவற்றை தயாரிப்பதற்கு ஏற்ப தொழிற்சாலை உற்பத்தி வரிசையை ஒழுங்குப்படுத்தும் முயற்சியாகவும் இந்த விற்பனை நிறுத்தம் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

அதேபோல் மேற்கூறப்பட்டுள்ள க்ரெட்டா & வென்யூ கார்களின் வேரியண்ட்களின் தயாரிப்பு பணிகளை நிறுத்தி கொண்டுள்ளதாக ஹூண்டாய் சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும், இப்போதும் இந்த வேரியண்ட்கள் சில டீலர்ஷிப் மையங்களில் ஸ்டாக்கில் இருக்கலாம். ஆதலால் க்ரெட்டா (அ) வென்யூ காரை வாங்க திட்டமிட்டு வந்தவர்கள் இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

க்ரெட்டா, வென்யூ எஸ்யூவி கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் நிறுத்தம்!! ஹூண்டாய் அதிரடி நடவடிக்கை!

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்கனவே சில வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. புதிய க்ரெட்டாவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் முன் மற்றும் பின்பக்க தோற்றங்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார் இன்னமும் தென்கொரியாவில் சோதனை ஓட்டங்களில்தான் உள்ளதே தவிர்த்து, எந்த நாட்டிலும் வெளியீடு செய்யப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, March 7, 2022, 11:25 [IST]
English summary
Select hyundai creta venue variants discontinued
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+