மாருதி எல்லாம் இங்க வந்து வாலாட்டேவே முடியாது. டாடா தான் நம்பர் ஒன் இடத்துல இருக்குது...
கடந்த செப்டம்பர் மாதம் கமர்ஷியல் வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்திய பொருளாதாரத்திற்கு எப்படி கார்களின் விற்பனை முக்கியமோ அதே அளவிற்கு கமர்ஷியல் வாகனங்களில் விற்பனையும் முக்கியம் தான். கமர்ஷியல் வாகனங்கள் தான் இந்தியாவில் பொருளாதாரத்தை உயர்த்த உதவுகிறது. கமர்ஷியல் வாகன விற்பனை குறித்த செப்டம்பர் மாத விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதை விவரமாக இந்த பதிவில் காணலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் டாடா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 28,615 வாகனங்களைக் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப் மாதம் 24,822 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஒரே ஆண்டில் 15.28 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையான27,482 வாகன விற்பனையுடன் ஒப்பிடும் போது 4.12 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மார்கெட்டில் இந்நிறுவனம் மட்டும் 40.17 சதவீத பங்கை வைத்துள்ளது.

இரண்டாவது இடத்தை மஹிந்திரா நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 17,483 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 11,678 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஒரே மாதத்தில் மொத்தம் 49.71 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையான 16,625யுடன் ஒப்பிடும்போது 5.16 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 11,284 வானகங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 8476 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 33.13 சதவீத வளர்ச்சியாகும்.இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையான 10,183 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 10.81 சதவீத வளர்ச்சியாகும்.

கமர்ஷியல் வாகன செக்மெண்டில் பெரும்பாலான மார்கெட் பங்கை வைத்துள்ளது இந்த டாப் 3 நிறுவனங்கள் தான் மற்ற நிறுவனங்கள் குறைந்த மார்கெட் பங்கையே வைத்துள்ளன. இந்த ஓராண்டில் கர்மஷியல் வாகன விற்பனை19 சதவீதம் அதிகமாகியுள்ளது. ஹெவி வாகன விற்பனை மட்டும் 40 சதவீதம் அதிகமாகியுள்ளது. இதற்கு முக்கியமான காணம் அரசு நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. இதனால் கமர்ஷியல் மற்றும் ஹெவி வாகனங்களில் தேவைகள் அதிகமாகியுள்ளது.

இந்த பட்டியலில் 4வது இடத்தில் வால்வோ மற்றும் ஈஷர் மோட்டார் ஆகிய நிறுவனங்கள் இணைத்து உருக்கியுள்ள VECV உள்ளது. இந்நிறுவனம் கடந்த செப் மாதம் மொத்தம் 4638 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு 3808 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஒரே ஆண்டில் 21.80 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 9.96 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பட்டியலில் கார்கள் விற்பனையில் எப்பொழுதும் முதலிடத்தில் இருக்கும் மாருதி நிறுவனம் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 3036 வானகங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மொத்தம் 3912 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 22.39 சதவீதம் வீழ்ச்சியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையான 2665 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 13.92 சதவீதம் இந்த மாதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பட்டியலில் 6வது இடத்தில் டைம்லர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1162 வாகனங்களைக் கடந்த செப் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப் மாதம் வெறும் 1254 வானகங்களைத் தான் விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 7..34 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வெறும் 999 வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில் செப்டம்பர் மாதம்16.32 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

7வது இடத்தில் ஃபோர்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 984 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 861 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் 14.29 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதுவே ஆகஸ்ட் மாதம் 1208 கார்கள் விற்பனையாகியிருந்தது அத்துடன் ஒப்பிட்டால் கடந்த மாதம் 18.54 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

8வது இடத்தில் இசுஸூ நிறுவனம் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 725 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப் மாதம் 585 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 23.93 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 842 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 13.90 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.

இது போக மற்ற நிறுவனங்களில் வாகனங்கள் மொத்தம் 3306 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 4531 சதவீதம் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்


Click it and Unblock the Notifications








