என்ன பிரச்னை போயிட்டு இருக்கு.. இவரு இவ்ளோ கூலா இருக்காரே.. 2கோடி ரூபா காருடன் போஸ் கொடுத்த சிக்கர் தவான்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த ஆட்ட நாயகன்களில் சிக்கர் தவானும் ஒருவர் ஆவார். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க வீரராக ஆடி வரும் சிக்கர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது கேள்விக் குறியாக மாறியுள்ளது என்றே கூறலாம்.

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் தொடர் தோல்வியை இந்தியா பெற்றதன் விளைவாக சில சீனியர் கிரிக்கெட் வீரர்களை அணியில் இருந்து ஒதுக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பழைய வீரர்களுக்கு பதிலாக இஷான் கிஷான் போன்ற புதிய இளம் வீரர்கள் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல் முன்னணி வீரர்களின் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சிக்கர் தவான்

இந்த நிலையிலேயே சிக்கர் தவான் புதிதாக கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உண்மைதானா என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். சிக்கர் தவான் சமீபத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றான எம்8 கூபே ரக காருடன் போஸ் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும்.

இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே அவர் இப்போது வாங்கி இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. சிக்கர் தவான் பிஎம்டபிள்யூ எம்8 கூபே காரை கடந்த ஆண்டே வாங்கிவிட்டார். இதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் அப்போதே அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே காருடன் சேர்ந்து நிற்பது போன்ற படத்தை சிக்கர் தவான் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

சிக்கர் தவான்

இதுவே அவர் சொகுசு கார் புதிதாக வாங்கியதாக சிலர் நினைக்கு காரணமாக அமைந்தது. பிஎம்டபிள்யூவின் இந்த தயாரிப்பே அது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் மிக சூப்பரான திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட சொகுசு காராக உள்ளது. இந்த காரை முதல் முறையாக 2020 ஆம் ஆண்டிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்தே 2021ம் ஆண்டில் சிக்கர் தவான் இந்த சொகுசு கார் மாடலை வாங்கினார்.

மெட்டாலிக் பிளாக் ஷேட் நிறத்திலான காரையே அவர் வாங்கினார். இது தற்போது புத்தம் புதிது போல் காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே அனைவரும் சிக்கர் தவான் புதிதாக எம்8 கூபே சொகுசு காரை வாங்க எண்ண காரணமாக அமைந்தது. சிக்கர் தவான் இந்த சொகுசு காரை புதிதுபோல் வைத்திருக்க அவர் தொடர்ச்சியாக பராமரித்து வருவதே முக்கிய காரணமாக உள்ளது. எனவேதான் ஷோரூமில் இருந்தே இப்போதே இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதை போல் அது தெரிகின்றது.

சிக்கர் தவான்

அதேவேளையில் சிக்கர் தவான் இடத்தில் இந்த கார் மட்டுமல்ல இன்னும் பல சொகுசு வாகனங்கள் உள்ளன. அந்தவகையில், ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி63 உள்ளிட்ட அதிக பெர்ஃபார்மன்ஸ் திறன் கொண்ட கார்களே அவரிடத்தில் உள்ளன. பிஎம்டபில்யூ எம்ய8 கூபே ஓர் 2 கதவுகள் கொண்ட சூப்பர் காராகும். இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக 20 அங்குல அலாய் வீல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்த காரை எடைக் குறைவானதாக மாற்றுவதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாண்டுள்ளது. அந்தவகையில், கார்பன் ஃபைபர் காரின் எடையைக் குறைக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் இன்னும் பல சிறப்பு வசதிகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரில் சேர்த்திருக்கின்றது. எம்-ஸ்பெக் ரியர் டிஃப்யூசர் மற்றும் டபுள் ஃப்ளோ எக்சாஸ்ட் சிஸ்டம் ட்வின் பைக் செட்-அப் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மெரினோ லெதர் அப்ஹோல்டரி மற்றும் ஹர்மன் சவுண்ட் சிஸ்டம் போன்ற பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளது.

எம் ஸ்போர்ட் இருக்கைகள், ஆம்பியன்ட் லைட், பார்க் அசிஸ்ட் பிளஸ், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒயர்லெஸ் சார்ஜிங், பிஎம்டபிள்யூ திரை போன்று இன்னும் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் சிக்கர் தவான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எம்8 காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானது ஆகும். 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 592 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த டிரான்ஸ்மிஷனே அனைத்து வீல்களுக்கும் இயக்கத்தை கடத்துகின்றது. எம்8 கார் வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான காரையே சிக்கர் தவான் தன் வசம் வைத்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 27, 2022, 6:30 [IST]
English summary
Shikhar dhawan shared pic of his bmw m8
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+