தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் சிங்கப்பூருக்கு இப்படி ஒரு நிலைமையா? ரொம்ப டவுன் ஆயிருச்சு!

தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் சிங்கப்பூரில் கார் விற்பனை மிகவும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் சிங்கப்பூருக்கு இப்படி ஒரு நிலைமையா? ரொம்ப டவுன் ஆயிருச்சு!

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்கள் பரவி காணப்படுகின்றனர். இந்த வகையில் தமிழர்கள் மிகவும் அதிகமாக வசிக்க கூடிய பகுதிகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த குட்டி தேசத்தை உருவாக்கியதிலும், வளர்த்து எடுத்ததிலும் தமிழர்களின் பங்கு மிகவும் அதிகம். எனவே சிங்கப்பூரும் நாம் அதிகமாக கவனிக்க வேண்டிய பகுதிகளில் ஒன்றுதான்.

அப்படிப்பட்ட சிங்கப்பூரில் நடப்பாண்டில் கார் விற்பனை மிகவும் குறைந்து காணப்படுகிறது. சிங்கப்பூரில் நடப்பாண்டின் முதல் பாதியில், அதாவது ஜனவரி-ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 16,567 கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2021ம் ஆண்டின் இதே காலகட்டத்தில், 25,777 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாக சிங்கப்பூரில் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் கார் விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முழுவதும் கணக்கிட்டால், சிங்கப்பூரில் 45,442 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டில் சுமார் 30 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சிங்கப்பூரில் நடப்பாண்டின் முதல் பாதியில் அதிக கார்களை விற்பனை செய்த டாப்-5 நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டொயோட்டா நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் சிங்கப்பூரில் நடப்பாண்டின் முதல் பாதியில் 3,545 கார்களை விற்பனை செய்திருக்கிறது.

இந்த பட்டியலில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2,940 கார்களை விற்பனை செய்ததன் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் பிஎம்டபிள்யூ நிறுவனம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 1,851 கார்களை விற்பனை செய்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது. 1,757 கார்களை விற்பனை செய்ததன் மூலம் ஹோண்டா நிறுவனம் 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் நிறுவனம் பிடித்துள்ளது. 891 கார்களை விற்பனை செய்ததன் மூலம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் உள்ள டொயோட்டா, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஹோண்டா மற்றும் ஹூண்டாய் ஆகிய 5 நிறுவனங்களும் இந்திய சந்தையிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ஆனால் இந்த 5 நிறுவனங்களில் இந்திய சந்தையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது ஹூண்டாய் நிறுவனம்தான்.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்த 2வது இடத்தை பிடிப்பதற்காக சமீப காலமாக ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் மல்லுகட்ட தொடங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 27, 2022, 23:47 [IST]
English summary
Singapore s top 5 car brands
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+