இன்னோவாபோல் இருக்கும் இந்த சோலார் கார் உற்பத்திக்கு தயார்! சூரிய ஒளி ஒன்னு மட்டும்போதும் 112 கிமீ பயணிக்கும்!

சூரிய ஒளியில் இயங்கக் கூடிய சோலார் கார் (Solar car) ஒன்று உற்பத்தி நிலைக்கு தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உருவத்தில் லேசாக இன்னோவா எம்பிவி காரை பிரதிபலிக்கும் இந்த சோலார் எலெக்ட்ரிக் கார் பற்றிய கூடுதல் விபரங்களை இப்-பதிவில் பார்க்கலாம், வாங்க.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

மின்சாரத்தால் (Electric Vehicles) இயங்கும் வாகனங்களுக்கு உலகெங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியில் வாகன உற்பத்தியாளர்கள் களமிறங்கியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் மின் வாகனங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

அதாவது, மின் வாகனங்களில் புதிய அதி-நவீன வசதிகளை புகுத்தும் பணிகளை அவர்கள் மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், சில மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சோலார் (Solar)-ஆல் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியைக் கையில் எடுத்திருக்கின்றனர்.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

ஏற்கனவே, லைட்இயர் (Lightyear) நிறுவனம் அதன் சோலாரால் இயங்கக் கூடிய ஓ (0) எனும் சோலார் இவி காரை உற்பத்திக்கு உயர்த்தியிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு நிறுவனமும் அதன் வரிசையில் இணைந்திருக்கின்றது. ஆமாங்க மற்றும் ஓர் கார் உற்பத்தி நிறுவனம், சோலாரால் இயங்கும் கார் ஒன்றின் உற்பத்தி பணிகளை வெகு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

ஜெர்மென் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சோனோ மோட்டார்ஸ் (Sono Motors), நிறுவனமே சோலாரால் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் காரை விரைவில் உற்பத்தி செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. இிந்த சோலார் வாகனம் பார்ப்பதற்கு லேசாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. ஆனால், அக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் உடற்கூறுகள் இதனைத் தனித்துவமான ஸ்டைலில் காட்சிப்படுத்தச் செய்கின்றன.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

தற்போது பரிசோதனைக்கான முன்மாதிரி மாடலை நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. வெகு விரைவில் விற்பனைக்கான வாகன உற்பத்தியையும் அது தொடங்க இருக்கின்றது. சியோன் (Sion) எனும் பெயரிலேயே சோனோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்த உலகிற்கு அறிமுகமாக இருக்கின்றது.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

வரும் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இக்காரின் உற்பத்தி பணிகள் தொடங்க இருக்கின்றன. பல ஆண்டுகளாக இக்காரை மேம்படுத்தும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வந்தநிலையில் தற்போதே அது உற்பத்திக்கு நிலைக்கு தயாராகி இருக்கின்றது. இந்த சோலார் காரை வால்மெட் ஆட்டோமோட்டிவ் (Valmet Automotive), எனும் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கூட்டணியின் அடிப்படையிலேயே சோனோ மோட்டார்ஸ் உருவாக்க இருக்கின்றது.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

காரின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் வழக்கமான பேனல்களுக்கு பதிலாக சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 456 சோலார் செல்கள் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக சுமார் 112 கிமீ தூரம் வரை பயணிக்க கூடிய மின்சார திறனை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

வெறும் சூரிய ஒளியின் உதவியின் வாயிலாக மட்டுமே கிடைக்கக் கூடிய ரேஞ்ஜின் விபரம் ஆகும். இத்துடன் ஓர் முழுமையான சார்ஜில் 305 கிமீ பயணிக்கும் திறனை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கும் இக்காரில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூப்பரான வாகனமாகவே சியோன் விரைவில் உலக சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

இது ஓர் ஐந்து பேர் பயணிக்கக் கூடிய சோலார் எலெக்ட்ரிக் காராகும் வாகனமாகும். ஏற்கனவே இக்காருக்கு 19 ஆயிரம் முன் பதிவுகள் குவிந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவிற்காக 2,225 யூரோக்கள் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்காருக்கு 25 ஆயிரம் யூரோக்கள் விலை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

உற்பத்திக்கு தயாரான சோலார் கார்... சூரிய ஒளி ஒன்னு இருந்தாபோதும் 112 கிமீ தாராளமா பயணிக்கலாம்!

ஒட்டுமொத்தமாக ஏழாண்டுகளில் 2.50 லட்சம் யூனிட்டுகள் சியோன் சோலார் கார்களை உருவாக்க நிறுவனம் சோனோ மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கின்றது. அனைத்தும் ஃபின்னஷ் நிறுவனமான வால்மெட் ஆட்டோமோட்டீவ் உடனான கூட்டணியின் வாயிலாகவே அந்நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 16:51 [IST]
English summary
Sion solar car ready enter production in 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+