'டார்க் கன்வெர்டர்' ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் 6 கார்களின் பட்டியல்! ஆறுமே சற்று விலை குறைவானவை
இந்தியாவில் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் (Torque Converter AT Gearbox) வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஆறு கார்களின் பட்டியலைக் கீழே உள்ள பதிவில் வழங்கியிருக்கின்றோம். அவைகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்தியாவில் மக்கள் தொகையை போல் வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதன் விளைவாக சாலைகளில் வாகனங்கள் நிரம்பி வழிந்துக் காணப்படுகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலும் முன்பைக் காட்டிலும் தற்போது அதிகரித்து காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, சென்னை, பெங்களூரு, மும்பை, மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் வாகன நெரிசல் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவில் பன்மடங்கு பெருகிக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான பகுதிகளில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வாகனங்களை இயக்குவது என்பது மிகுந்த சவாலானது. மேலும், அது ஓட்டுநரை விரைவில் சோர்வாகவும் ஆக்கிவிடுகின்றன.

இத்தகைய சூழலில் இருந்து ஓட்டுநர்களைக் காக்கும் விதமாக தானியங்கி கியர்பாக்ஸ் (AMT) வசதிக் கொண்ட கார்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்க தொடங்கியிருக்கின்றன. ஆனால், இது பழைய தலைமுறை கார்களில் வழங்கப்பட்ட டார்க் கன்வெர்டர் ஏடி (torque converter AT) கியர்பாக்ஸ்களை போல் ஸ்மூத்தானதாக இல்லை என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆமாங்க அதனாலதான் இப்போதும் இந்தியர்கள் மத்தியில் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இதனை உணர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் முன்னணி கார் மாடல்கள் சிலவற்றில் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸை வழங்கி வருகின்றன.

அப்படி எந்தெந்த நிறுவனங்கள், தங்களின் எந்தெந்த கார் மாடல்களில் இந்த கியர்பாக்ஸ் வசதியை வழங்குகின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்கள் போகலாம். சற்று விலை குறைவான கார்களின் பட்டியலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz)
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் சியாஸ்-ம் ஒன்று. இது ஓர் செடான் ரக கார் மாடலும். அதிக இட வசதிக் கொண்ட செடானாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான காரிலேயே சியாஸ் நிறுவனம் அதன் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதியை வழங்குகின்றது. இது 4 ஸ்பீடு கியர்பாக்ஸாகும்.

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் சியாஸ் கார் மாடலிலேயே இந்த வசதியை மாருதி சுஸுகி வழங்குகின்றது. இந்த தேர்வின் ஆரம்ப விலை ரூ. 10.71 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரீமியம் தர அம்சங்கள் சற்று அதிகம் என்பதால் இத்தகைய உச்ச விலையில் இக்கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)
மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா ப்ரெஸ்ஸா எனும் மற்றுமொரு தயாரிப்பிலும் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதியை வழங்குகின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். நாட்டில் மிக சிறப்பான விற்பனையைப் பெறும் எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்றாகும். உயர் குவாலிட்டி, பிரீமியம் தர அம்சங்கள், சிறந்த திறன் கொண்ட எஞ்ஜின் என அனைத்திலும் சூப்பரான தேர்வாக ப்ரெஸ்ஸா காட்சியளிக்கின்றது.

இந்த காரின் விஎக்ஸ்ஐ எனும் வேரியண்டிலேயே டார்க் கன்வெர்டர் ஏடி வசதியை சுஸுகி வழங்குகின்றது. இதுவும் சியாஸ் கார் மாடலைப் போல் 4 ஸ்பீடு வசதிக்கொண்ட ஏடி கியர்பாக்ஸ் ஆகும். இந்த தேர்வு ரூ. 9.97 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)
மாருதி சுஸுகி எர்டிகா, இது இந்தியாவின் மலிவு விலை எம்பிவி ரக கார் மாடல்களில் ஒன்றாக காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலிலும் மாருதி நிறுவனம் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஏடி வசதியை வழங்குகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 10.12 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இக்காரில் தாரளமாக ஏழு பேர் டிரைவருடன் சேர்த்து ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

மாருதி சுஸுகி எக்ஸ்எல் 6 (Maruti Suzuki XL6)
மாருத சுஸுகி எக்ஸ்எல்6, எர்டிகாவின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனாக இது காட்சியளிக்கின்றது. இந்தியாவில் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இக்காரை மாருதி அதன் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலேயே 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் வசதியை மாருதி வழங்குகின்றது. இந்த தேர்வு ஜெட்டா எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.34 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் (Maruti Suzuki S-Cross)
இந்திய சந்தையில் சற்று குறைவான விலையில் டார்க் கன்வெர்டர் ஏடி தேர்வுடன் விற்பனைக்குக் கிடைக்கும் காராக மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்-க்ராஸ் இருக்கின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலேயே இவ்வசதியை மாருதி வழங்குகின்றது. டெல்டா எனும் பெயரில் இத்தேர்வு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.1 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

கியா சொனெட் (KIA Sonet)
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக சற்று குறைவான விலையில் டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸை வழங்கும் வாகனமாக கியா சொனெட் இருக்கின்றது. எச்டிஎக்ஸ் எனும் பெயரிலேயே இத்தேர்வு விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.5 லிட்டர் டீசல் மோட்டாருடனேயே டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸை வழங்குகின்றது. இது ஓர் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 11.69 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications