உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

ஸ்கோடா நிறுவனம் பழைய பன்னீர் செல்வமாக மாறி கெத்து காட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 4,222 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 3,829 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

நடப்பாண்டின் முதல் 8 மாதங்களில் (ஜனவரி-ஆகஸ்ட்) ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 37,568 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுதான் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான ஆண்டாகும். அதாவது இந்திய சந்தையில் ஒரு ஆண்டில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகம்.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

இதற்கு முன்பாக வேறு எந்த ஆண்டிலும் ஸ்கோடா நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. இதற்கு முன்பாக கடந்த 2012ம் ஆண்டு ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 34,678 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே முந்தைய சாதனையாக இருந்து கொண்டிருந்தது.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

ஆனால் அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், 2012ம் ஆண்டின் சாதனை 2022ம் ஆண்டில் வெறும் 8 மாதங்களிலேயே முறியடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்கள் எஞ்சியுள்ளதால், 2022ம் ஆண்டில் ஸ்கோடா நிறுவனம் பிரம்மாண்டமான சாதனையை படைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

ஒரு சமயத்தில் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறி விடும் என்றெல்லாம் பேசப்பட்டது. அந்த அளவிற்கு ஸ்கோடா கார்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்தது. ஆனால் தற்போது விற்பனையில் புதிய புதிய சாதனைகளை படைக்கும் அளவிற்கு இந்திய சந்தையில் ஸ்கோடா கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

இதற்கு காரணம் இரண்டே இரண்டு கார்கள்தான். அவை ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகும். இவை இரண்டும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்த கார்கள் ஆகும். இந்த 2 கார்களுக்குமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

இதன் காரணமாகவே இந்திய சந்தையில் ஸ்கோடா கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதில், ஸ்கோடா குஷாக் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுடன் ஸ்கோடா குஷாக் போட்டியிட்டு வருகிறது.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கும் ஸ்கோடா குஷாக் விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது. ஸ்கோடா நிறுவனம் குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா காரானது, செடான் செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி (Honda City), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்கள்தான், ஸ்கோடா ஸ்லாவியா காரின் மிகவும் முக்கியமான போட்டியாளர்களாக இருந்து வருகின்றன.

உன்ன இப்படி பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா... பழைய பன்னீர் செல்வமாக மாறிய ஸ்கோடா... நடுக்கத்தில் போட்டியாளர்கள்!

ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா செடான் காரை நடப்பாண்டு தொடக்கத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களின் மூலம் ஸ்கோடா நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் தற்போது மிகப்பெரிய உத்வேகம் கிடைத்துள்ளது. இந்த உத்வேகத்தை பயன்படுத்தி கொண்டு ஸ்கோடா நிறுவனம் புதிய உச்சங்களை எட்டும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda auto india august 2022 sales report
Story first published: Wednesday, September 7, 2022, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X