டாடா, ஹூண்டாய்க்கு போட்டியாக மின்சார காரை களமிறக்கும் ஸ்கோடா... நாட்டுல சிறப்பான சம்பவம் காத்திருக்கு!
டாடா, ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்களின் மின்சார கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் ஸ்கோடா நிறுவனம் மிக விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மின் வாகன சந்தனையில் டாடா, ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. விற்பனையிலும் இந்நிறுவனங்கள் கொடிக்கட்டு பறக்கின்றன. ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையைப் பெறுகின்ற வகையில் விற்பனையானது தொடர்ச்சியாக வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் முன்னணி நிறுவனங்களின் மின் வாகனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் செக் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்கோடா, மிக விரைவில் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போதே மின் வாகனங்களின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2021ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது. இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே ஸ்கோடா நிறுவனம், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நிறுவனம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருமா என்பது பற்றிய தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மிற்றும் ஹூண்டாய் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே இந்த பிரிவை பூர்த்தி செய்யும் வகையில் தங்களின் முன்னணி கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வுகளை விற்பனைக்கு வழங்கி வருகின்றன. இன்னும் ஒரு சில நிறுவனங்கள் சிஎன்ஜி வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக புதுமுக சிஎன்ஜி வாகனங்களைக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், இந்த பிரிவில் ஸ்கோடா பங்கேற்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் 2030ம் ஆண்டிற்குள் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையில் மின்சார கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் ஜேக் ஹோலிஸ், "நாங்கள் நிச்சயம் மின் வாகன சந்தையில் எங்களது பங்களிப்பை வழங்குவோம்" என தெரிவித்திருக்கின்றார். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பிற பிராண்டுகளான ஆடி மற்றும் போர்ஷே ஏற்கனவே மின் வாகன பிரிவில் பங்களிக்கத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட வாகனங்களை அவை களமிறக்கி வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஸ்கோடா பிராண்டின் மின் வாகனங்களும் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதன் முதல் மின்சார கார் மாடல் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய துள்ளியமான விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இன்னும் ஒரு சில மாதங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிஎன்ஜி கார் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தங்களிடம் சிஎன்ஜி காரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் எதுவும் இல்லை. தங்களின் பிளாட்பாரம், தொழில்நுட்பம் மற்றும் டிஎஸ்ஐ எஞ்ஜின்களை சிஎன்ஜி கார்களாக மாற்றுவது பெரும் சவாலானதாக இருக்கின்றது" என்றார்.

ஸ்கோடா தற்போது இந்திய சந்தையில் குஷாக், ஸ்லேவியா, ஆக்டேவியா, சூப்பர்ப் மற்றும் கோடியாக் ஆகிய கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவை அனைத்திற்கும் இந்தியாவில் கணிசமான சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக ஸ்கோடா கார் விற்பனை கடந்த ஆண்டு சிறந்த வளர்ச்சியைப் பெற்றது. 24 ஆயிரம் யூனிட் வரை அவை விற்பனையாகின் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








