விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

ஸ்கோடா இந்தியா நிறுவனம் விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதம் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதம் 5,608 கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்தில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக கார்களை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்தது கிடையாது. இதற்கிடையே ஸ்கோடா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் வெறும் 1,159 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 5,608 ஆக உயர்ந்துள்ளது. இது 383.8 சதவீத வளர்ச்சியாகும்.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

இதுதவிர நடப்பு 2022 காலாண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் (2022ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டம்) இந்திய சந்தையில் 13,120 கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2021 காலாண்டர் ஆண்டின் முதல் காலாண்டுடன் (2021ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டம்) ஒப்பிடுகையில், இது 5 மடங்கு அதிகமாகும்.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

இந்திய சந்தையில் ஒரு காலாண்டில் ஸ்கோடா நிறுவனம் பதிவு செய்த அதிகபட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பாக எந்தவொரு காலாண்டிலும் ஸ்கோடா நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. ஸ்கோடா நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு இரண்டு கார்கள்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

அவை ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகும். இதில், குஷாக் காரானது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதே நேரத்தில் ஸ்லாவியா காரானது, மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதில், ஸ்கோடா குஷாக் காரானது, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு முக்கியமான போட்டியாளராக இருந்து வருகிறது.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

அதே நேரத்தில் ஸ்கோடா ஸ்லாவியா காரானது, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற கார்களுக்கு முக்கியமான போட்டியாளராக இருந்து கொண்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாகதான் ஸ்கோடா நிறுவனம் இயங்கி வருகிறது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான்.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

தற்போது இந்திய சந்தையில் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய 2 நிறுவனங்களுமே சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளன. ஸ்கோடா நிறுவனத்தை போல், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டைகுன் (Volkswagen Taigun) மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அடுத்ததாக விர்டுஸ் (Volkswagen Virtus) மிட்-சைஸ் செடான் காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரை உற்பத்தி செய்யும் பணிகள் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டன. இந்த கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதை இது உணர்த்துகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் செடான் காரை வரும் மே மூன்றாவது வாரத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெண்ட்டோ காருக்கு பதிலாக விர்டுஸ் காரை களமிறக்கவுள்ளது. ஸ்கோடா குஷாக், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் கட்டமைக்கப்படவுள்ளது.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் செடான் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. இந்தியா முழுவதும் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாகவும், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் விர்டுஸ் காருக்கு முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

விற்பனையில் பிரம்மாண்ட சாதனையை படைத்த ஸ்கோடா... இந்த ரெண்டு கார்கள்தான் இதுக்கு காரணம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் செடான் காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகளை வழங்கவுள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு உரிய பாணியில் அதிநவீன வசதிகளை பெற்றிருப்பதுடன், பயணிகளுக்கு சொகுசான பயணத்தையும் விர்டுஸ் வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2022, 14:12 [IST]
English summary
Skoda india registers highest ever monthly sales in march 2022
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+