சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

ஸ்கோடா நிறுவனம் குஷாக் (Skoda Kushaq) கார் மாடலில் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த புதிய வேரியண்டை சிறப்பம்சங்கள் சிலவற்றை நீக்கிய வாகனமாக அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda) அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான குஷாக் (Kushaq)இல் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அறிமுகத்தை நிறுவனம் சத்தமே இல்லாமல் செய்திருப்பது இந்திய வாகன சந்தையை ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் கார் மாடலாக குஷாக் உள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தை தூக்கிய நிறுத்திய கார் மாடல்களில் குஷாக் முதன்மை வகிக்கின்றது. இத்தகைய ஓர் மாடலை சிறப்பிக்கும் விதமாகவே நிறுவனம் தற்போது ஸ்டைல் என்எஸ்ஆர் (Style NSR) எனும் வேரியண்டை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

இது ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்டைல் (Style) எனும் வேரியண்டைக் காட்டிலும் சற்றுக் குறைவான வசதிகள் கொண்ட தேர்வாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய வேரியண்டில் சன்ரூஃப் இல்லாமல் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. புதிய வேரியண்டை சற்று விலை குறைவாக விற்பனைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கையை ஸ்டைல் என்எஸ்ஆர் வேரியண்டில் ஸ்கோடா மேற்கொண்டிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

இதுமட்டுமின்றி, விலை குறைப்பிற்காக ரெயின் சென்சிங் வைப்பர் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்களையும் ஸ்கோடா புதிய வேரியண்டில் வழங்கவில்லை. இதன் விளைவாக ஸ்டைல் வேரியண்டைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் குறைவான விலையில் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 15.09 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையையே ஸ்கோடா நிறுவனம் புதிய தேர்விற்கு நிர்ணயித்துள்ளது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி இன்னும் சில அம்சங்களும் புதிய வேரியண்டில் இடம் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், 8 அங்குல முழு டிஜிட்டல் டிரைவர் திரையை ஸ்டைல் என்எஸ்ஆர் இழந்திருக்கின்றது. இத்துடன், 16 அங்குல வீல்களுக்கு பதிலாக 15 அங்குல வீல்களே வழங்கப்பட்டுள்ளன. இத்தனை அம்சங்களை இழந்த தேர்வாகவே ஸ்டைல் என்எஸ்ஆர் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

அதேவேலையில் ஆம்பிசன் 1.0 எம்டி தேர்வைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக இப்புதிய தேர்வு காட்சியளிக்கின்றது. தற்போது உலகளவில் செமி-கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் தானாக ஃபோல்ட் ஆகும் ஓஆர்விஎம் அம்சத்தை குஷாக் ஆம்பிசன் வேரியண்டில் இருந்து சத்தமே இல்லாமல் நீக்கியது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

ஸ்டைல் வேரியண்டில் இருந்தும் இந்த அம்சத்தை ஸ்கோடா நீக்கியது. இது ஸ்கோடா குஷாக் கார் பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இந்த அம்சத்தை டீலர்கள் சிலர் ரூ. 20 ஆயிரம் கூடுதல் தொகையில் நீக்கப்பட்ட அம்சங்களை அன்-ஆஃபிசியலாக வழங்க ஆரம்பித்தனர். இதற்கிடையில், முக்கிய அம்சங்களை நீக்கியதன் காரணத்தினால் ஸ்கோடா நிறுவனம் ஆம்பிசன் மற்றும் ஸ்டைல் வேரியண்டுகளுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடியை வழங்கியது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

இந்த மாதிரியான சூழலிலேயே ஸ்கோடா நிறுவனம் ஸ்டைல் என்எஸ்ஆர் எனும் புதிய வேரியண்டை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதில் என்எஸ்ஆர் என்ற பெயர் ஸ்டைலுடன் சேர்க்கப்பட்டிருப்பதற்கு, இந்த வேரியண்டில் சன்ரூஃப் இருக்காது என கூறப்படுகின்றது. ஸ்கோடா நிறுவனம் குஷாக் கார் மாடலில் இதுபோன்று புதிய தேர்வை அறிமுகம் செய்வது இது முதல் முறையல்ல.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

கடந்த ஏப்ரல் மாதத்தில் இதேபோல் குஷாக்கில் புதிதாக ஆம்பிசன் கிளாசிக் (Kushaq Ambition Classic) எனும் வேரியண்டை நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த தேர்வு மேனுவல் மற்றும் தானியங்கி என இரு விதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் மேனுவல் வேரியண்ட் ரூ. 12.69 லட்சத்திற்கும், தானியங்கி வேரியண்ட் ரூ. 14.09 லட்சத்திற்கும் விற்பனைக்கும் கிடைக்கும் என அப்போது நிறுவனம் அறிவித்தது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருந்த ஆம்பிசன் வேரியண்டிற்கு கீழ்நிலையில் இந்த தேர்வு அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

சத்தமே இல்லாமல் குஷாக்கில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... இதுல சன்ரூஃப் போன்ற நிறைய அம்சங்களை காணல!

ஸ்கோடா குஷாக் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையிரண்டும் பெட்ரோல் மோட்டார்கள் ஆகும். டீசல் எஞ்ஜின் தேர்வை குஷாக் காரில் ஸ்கோடா வழங்கவில்லை. இக்கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 11.29 லட்சத்திற்கும், உயர் நிலை வேரியண்ட் ரூ. 19.49 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda launches new kushaq style nsr variant at inr 15 09 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X