ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்.. செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் அதன் ஸ்லாவியா செடான் காரை அதிக பவர்ஃபுல்லானதாக வழங்கும் வகையில் புதிய 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் வேரியண்டை புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று புதிய பவர்ஃபுல் எஞ்ஜின் கொண்ட வேரியண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் அதன் ஸ்லாவியா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. "என்னது இது போன வாரம் (பிப்ரவரி 28)-தானே இந்த கார் லான்சாச்சு போட்டு இருந்தாங்க. இப்போ மறுபடியும் அறிமுகம்னு போட்றாங்க-னு குழப்பிக்காதீங்க".

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

அன்றைய தினம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது ஸ்லாவியாவின் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் ஆகும். இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் வேரியண்ட் ஆகும். இதன் வருகையை ஏற்கனவே நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இன்று (மார்ச் 3) அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

ஸ்கோடா ஸ்லாவியா ஓர் செடான் ரக காராகும். இந்த கார் மாடலை அதிக பவர்ஃபுல்லான காராக வழங்கும் பொருட்டே தற்போது 1.5 டிஎஸ்ஐ வேரியண்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 16.19 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

இரு விதமான தேர்வுகளில் 1.5 டிஎஸ்ஐ எஞ்ஜின் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. ஸ்டைல் எம்டி மற்றும் ஸ்டைல் ஏடி ஆகிய இருவிதமான தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் தேர்விலும் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகின்றது.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

ஏற்கனவே கூறியதைப் போல் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாரானது அதிக பவர்ஃபுல்லான எஞ்ஜினாக காட்சியளிக்கின்றது. இது அதிகபட்சமாக 148 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆகிய இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் இந்த எஞ்ஜினில் வழங்கப்படுகின்றது.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த திறன் ஸ்கோடா ஸ்லாவியாவை அதிக பவர்ஃபுல்லான காராக காட்டும் வகையில் இருக்கின்றது. இதுதவிர, இக்காரில் அதிகளவில் சிறப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 10 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

இதுமட்டுமின்றி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், மிரர்லிங்க் கார் இணைப்பு தொழில்நுட்பம், ஒயர்லெஸ் சார்ஜிங், ஆம்பிசியண்ட் மின் விளக்கு, ரியர் ஏசி வெண்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த கார் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 113 எச்பி பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டாரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஏடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரின் வருகை ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசுகி சியாஸ் உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அதிக சிறப்பு வசதிகள் மற்றும் சிறந்த எஞ்ஜின் தேர்வுடன் இக்கார் கால் தடம் பதித்துள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா 1.5 லிட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம பவர்ஃபுல்லான செடான்! விலை எவ்ளோ தெரியுமா?

விலை விபரம் பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

Skoda Slavia 1.0-litre TSI
Variant Price
Active MT ₹10.69 Lakh
Ambition MT ₹12.39 Lakh
Ambition AT ₹13.59 Lakh
Style MT without sunroof ₹13.59 Lakh
Style MT with sunroof ₹13.99 Lakh
Style AT with sunroof ₹15.39 Lakh
Skoda Slavia 1.5-litre TSI
Variant Price
Style MT with sunroof ₹16.19 Lakh
Style AT with sunroof ₹17.79 Lakh

More from DriveSpark

Article Published On: Thursday, March 3, 2022, 12:11 [IST]
English summary
Skoda slavia 1 5 tsi launched in india here is full details
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+