ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

ஸ்கோடா ஸ்லாவியா காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா (Skoda Slavia) செடான் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது. இதன் 1.0 லிட்டர் இன்ஜின் மாடல் வரும் பிப்ரவரி 28ம் தேதியும், 1.5 லிட்டர் இன்ஜின் மாடல் வரும் மார்ச் 3ம் தேதியும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேதிகள் ஆகும்.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. அத்துடன் ஸ்லாவியா கார்களை இந்தியாவில் உள்ள ஸ்கோடா ஷோரூம்களுக்கு அனுப்பும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. மேலும் ஸ்லாவியா காருக்கான முன்பதிவுகளையும் ஸ்கோடா நிறுவனம் ஏற்று கொண்டு வருகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

நீங்கள் ஸ்லாவியா காரை முன்பதிவு செய்ய விரும்பினால், 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகில் உள்ள சஹான் ஆலையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்களுடன் ஸ்கோடா ஸ்லாவியா கார் போட்டியிடும்.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) காருடனும் ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிடும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய சந்தையில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஸ்கோடா ஸ்லாவியா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய சந்தையில் வரும் மார்ச் 8ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. அதை தொடர்ந்து, வரும் மே மாதம் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. மறுபக்கம் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமல்லாது, 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வையும் பெற்றுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

ஸ்கோடா ஸ்லாவியா காரின் நீளம் 4,541 மிமீ ஆகும். அதே நேரத்தில் இதன் அகலம் 1,752 மிமீ ஆகவும், உயரம் 1,487 மிமீ ஆகவும் உள்ளது. அதே சமயம் ஸ்கோடா ஸ்லாவியா காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 179 மிமீ ஆகும். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு இணையானது என ஸ்கோடா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,651 மிமீ ஆகும். இதன் மூலம் தொலை தூர பயணங்களின்போதும் பயணிகளுக்கு நல்ல சௌகரியம் கிடைக்கும். ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்டீரியரில், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வட்ட வடிவ ஏசி வெண்ட்கள் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் அதை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேன் விர்டுஸ் ஆகிய இரண்டு கார்களும் பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் காரையும், ஸ்கோடா நிறுவனம் குஷாக் காரையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தன.

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் எஸ்யூவி கார்களை போன்ற க்ரவுண்ட் க்ளியரன்ஸ்... எவ்ளோனு தெரியுமா?

இவை இரண்டும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்கள் ஆகும். அதை தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரையும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் காரையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளன. இவை இரண்டுமே செடான் ரகத்தை சேர்ந்த கார்கள். இந்திய சந்தையில் விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 22, 2022, 21:15 [IST]
English summary
Skoda slavia ground clearance
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+