போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா ஸ்லாவியா காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது செடான் ரக கார் ஆகும். ஸ்கோடா நிறுவனம் செடான் கார்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வெளிவரவுள்ள செடான் கார் என்பதால், ஸ்கோடா ஸ்லாவியா மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த சூழலில் ஸ்லாவியா செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் அதிகாரப்பூர்வ தேதியை ஸ்கோடா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா கார் வரும் பிப்ரவரி 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா கார் வரும் மார்ச் 3ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியிலேயே இந்த இரண்டு மாடல்களின் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவரி பணிகளும் தொடங்கப்படவுள்ளது. அதாவது 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மாடலின் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவரி பணிகள் பிப்ரவரி 28ம் தேதியே தொடங்கப்படும்.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

அதேபோல் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மாடலின் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவரி பணிகள் மார்ச் 3ம் தேதியே தொடங்கப்படும். ஸ்கோடா ஸ்லாவியா காருக்காக ஆவலுடன் காத்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனரான ஜேக் ஹோலிஸ், சமூக வலை தளங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்லாவியா காரின் உற்பத்தி பணிகளை ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சஹான் பகுதியில் ஸ்கோடா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்குதான் ஸ்லாவியா காரின் உற்பத்தி பணிகளை ஸ்கோடா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

அத்துடன் இந்தியாவில் உள்ள ஸ்கோடா டீலர்ஷிப்களுக்கும் ஸ்லாவியா கார்கள் ஏற்கனவே வர தொடங்கி விட்டன. உற்பத்தி தொடக்கம், டீலர்ஷிப்களுக்கு கார்கள் வருகை ஆகியவை ஸ்கோடா ஸ்லாவியா கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதை நமக்கு உணர்த்தின. எதிர்பார்த்தபடியே இன்னும் சில நாட்களில் ஸ்கோடா ஸ்லாவியா கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஸ்கோடா ஸ்லாவியா கார் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கும். 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் என 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸ்லாவியா செடான் காரின் உட்புறத்தில், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் திரை, வட்ட வடிவ ஏசி வெண்ட்கள் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என ஏராளமான வசதிகளை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களுடன், ஸ்கோடா ஸ்லாவியா கார் போட்டியிடவுள்ளது. குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து ஸ்லாவியா காரை ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

போட்றா வெடிய... ஸ்கோடா ஸ்லாவியா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

எனவே இந்த காருக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஸ்கோடா நிறுவனம் நம்புகிறது. இந்திய சந்தையில் கார் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுடன் ஸ்கோடா நிறுவனம் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான் குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற புதிய கார்களை ஸ்கோடா நிறுவனம் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 10, 2022, 13:22 [IST]
English summary
Skoda slavia india launch date announced here are all the details
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+