சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் நாளை (பிப்ரவரி 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia). இது பிரீமியம் மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் (Skoda Rapid) காருக்கு மாற்றாக, ஸ்லாவியா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

புத்தம் புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் தனது செக்மெண்ட்டில், ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும். ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் 'இந்தியா 2.0' திட்டத்தின் கீழ் விற்பனைக்கு வரவுள்ள 3வது கார் என்ற பெருமையை ஸ்கோடா ஸ்லாவியா பெறுகிறது.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவை முதல் இரண்டு கார்களாகும். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே சகானில் உள்ள தொழிற்சாலையில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. அத்துடன் ஸ்லாவியா காரை டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணிகளையும் ஸ்கோடா நிறுவனம் தொடங்கி விட்டது.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

இந்த சூழலில், ஸ்கோடா ஸ்லாவியா கார் இந்திய சந்தையில் நாளை (பிப்ரவரி 28) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் நாளை முதல் ஸ்கோடா ஸ்லாவியா காரை, டெஸ்ட் டிரைவ் செய்யலாம். அத்துடன் இதே நாளில், அதாவது நாளையே ஸ்கோடா ஸ்லாவியா காரின் டெலிவரி பணிகளும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளன.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஜேக் ஹோலிஸ் இந்த தகவலை சமூக வலை தளங்கள் மூலமாக உறுதி செய்துள்ளார். பொதுவாக ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பின்னர், டெலிவரி பணிகளை தொடங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் மிக நீண்ட நாட்கள் அல்லது வாரங்களை எடுத்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

ஆனால் ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் நாளிலேயே, அதன் டெலிவரி பணிகளையும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களை இனிமேலும் காத்திருக்க வேண்டியதில்லை. ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு ஏற்கனவே முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மொத்தம் 3 வேரியண்ட்களில் ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களை போலவே, ஸ்கோடா ஸ்லாவியா காரும் MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

ஸ்கோடா குடும்பத்தை சேர்ந்த கார் என்பதை ஸ்லாவியா காரை பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விடலாம். ஸ்கோடா நிறுவனத்திற்கே உரித்தான பட்டாம்பூச்சி க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் மற்றும் மெஷின் கட் அலாய் வீல்கள் ஆகியவை ஸ்லாவியா செடான் காரில் வழங்கப்பட்டுள்ளன.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

அதே சமயம் ஸ்கோடா ஸ்லாவியா காரில், ப்ரிலியண்ட் சில்வர், கார்பன் ஸ்டீல், க்ரிஸ்டல் ப்ளூ, டொராண்டோ ரெட் மற்றும் கேண்டி ஒயிட் ஆகிய வண்ண தேர்வுகளில் ஸ்கோடா ஸ்லாவியா கார் கிடைக்கும். ஸ்கோடா ஸ்லாவியா காரில் பல்வேறு பிரீமியம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், முன் பகுதி பயணிகளுக்கு வென்டிலேட்டட் இருக்கைகள், ட்வின் ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

மேலும் பெரிய 10.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மைஸ்கோடா கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளும் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வழங்கப்பட்டுள்ளது.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

இதுதவிர கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல்கள், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளையும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது. அதே சமயம் ஸ்கோடா ஸ்லாவியா காரில் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

இதன்படி ஸ்கோடா ஸ்லாவியா காரில், 1.0 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.5 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் தேர்வும் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

இந்த இரண்டு இன்ஜின்களுடனுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இதுதவிர 1.0 லிட்டர் இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது. இதில், 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்தான் நாளை (பிப்ரவரி 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சூப்பரான செடான் கார்... நாளை விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா ஸ்லாவியா... ஹோண்டா சிட்டிக்கு சவால்!

அதே சமயம் 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் வரும் மார்ச் 3ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியிலேயே டெஸ்ட் டிரைவ் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 27, 2022, 20:33 [IST]
English summary
Skoda slavia sedan to launch in india tomorrow here are all the details
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+