சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா! ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்

ஸ்கோடா (Skoda) நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் கார்களான என்யூக் கூபே ஐவி (Enyaq Coupe iV) வாகனத்தை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வாகனம் பற்றிய கூடுதல் தகவலை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

ஸ்கோடா (Skoda) நிறுவனம், என்யாக் கூபே ஐவி (Enyaq Coupe iV) எலெக்ட்ரிக் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். ஐந்து இருக்கைகள் வசதிகளுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் எனும் வேரியண்டையும் ஸ்கோடா வெளியீடு செய்திருக்கின்றது.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

இது ஓர் ரேசிங் ஸ்போர்ட் மாடல் ஆகும். இந்த தரத்தில் ஸ்கோடா நிறுவனம் உருவாக்கியிருக்கும் முதல் மின்சார கார் இதுவே ஆகும். இரு எலெக்ட்ரிக் கார்களும் நிறுவனத்தின் எம்இபி மாடுலர் பிளாட்பாரத்தில் வைத்துக் கட்டமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

ஸ்கோடா நிறுவனம் என்யாக் கூபே ஐவி எலெக்ட்ரிக் காரை முற்றிலும் கவர்ச்சியான காராக உருவாக்கி இருக்கின்றது. காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லைட் மற்றும் இலுமினேடட் க்ரில், க்ரிஸ்டர் ஃபேஸ் (131 லைட்-எமிட்டிங் டையோடுகளுடன்) முன் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

இதுமட்டுமின்றி என்யாக் கூபே ஐவி காரின் பின் பக்கத்தில் எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன், விஆர்எஸ் ஸ்போர்ட் வெர்ஷனின் பின் பக்கத்தில் ஏர் டெஃப்ளெக்டருடன் கூடிய பொர்தோல் வழங்கப்பட்டுள்ளது. இக்கார் 4,653 மீ நீளம், 1,879 மீட்டர் அகலம், 1,622 மீட்டர் உயரம் மற்றும் 2,765 மிமீ வீல் அளவில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

காரின் உட்பகுதி அதிக பிரீமியம் தரத்துடன் காட்சியளிக்கின்றது. கார்பன் ஃபைபர் இன்செர்டுகள், ஹெட்ரெஸ்ட் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக இருக்கைகள், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் அலுமினியம் பெடல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

மேலும், அதிக தொழில்நுட்ப வசதியை வழங்கும் பொருட்டு 5.3 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 13 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

ஸ்கோடா என்யாக் கூபே ஐவி நான்கு வெவ்வேறு விதமான பவர் தேர்வுகளில், இரு மாறுபட்ட அளவுள்ள பேட்டரி மற்றும் அனைத்து வீல் இயக்கம் அல்லது பின் வீல் இயக்கம் என் பல்வேறு சிறப்பு தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 132 kW மின் மோட்டார் - 62 kWh பேட்டரி பேக் மற்றும் ரியர் வீல் இயக்கம், 150 kW மின் மோட்டார் - 82 kWh பேட்டரி பேக் மற்றும் ரியர் வீல் இயக்கம், 195 kW மின் மோட்டார் - 82 kWh பேட்டரி பேக் மற்றும் அனைத்து வீல் இயக்கம் ஆகிய தேர்வுகளிலேயே எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

இது மிக அதிக திறன் வெளிப்பாடு கொண்டதாக ஆர்எஸ் ஐவி வெர்ஷன் இருக்கின்றது. இது அதிகபட்சமாக 295 எச்பி பவர் மற்றும் 460 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி, வெறும் 6.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

சூப்பரான எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கும் ஸ்கோடா... ஒரு முறை சார்ஜ் பண்ணா 500க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!

இவற்றின் ரேஞ்ஜின் திறன் வெளிப்பாடும் வித்தியாசமானதாக இருக்கின்றன. 531 கிமீ தொடங்கி 545 கிமீ வரை ரேஞ்ஜை வெளியேற்றும். இத்தகைய சூப்பர் திறன்களுடனேயே ஸ்கோடா என்யாக் கூபே ஐவி கார் தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. உலகளவில் இதன் வெளியீட்டை நிறுவனம் அரங்கேற்றியிருக்கின்றது. ஆகையால் மிக விரைவில் படிப்படியாக ஒவ்வொரு நாடாக இக்காரின் விற்பனை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 1, 2022, 19:28 [IST]
English summary
Skoda unveiled enyaq coupe iv and enyaq coupe rs iv fully electric suv
மேலும்... #ஸ்கோடா #skoda #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+