ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180கிமீ வேகத்துல போகும்! இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார வாகனம் பற்றிய முழுமையான தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனம் ஸ்மார்ட் (Smart). இந்நிறுவனம் அதன் முதல் எஸ்யூவி ரக காரை வெளியீடு செய்திருக்கின்றது. புதிய காருக்கு #1 (Smart #1) எனும் பெயரை நிறுவனம் வைத்திருக்கின்றது. இது ஓர் மின்சார வாகனமாகும். ஸ்மார்ட், மெர்சிடிஸ் (Mercedes) மற்றும் கீலி (Geely) ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட நிறுவனமே இது.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட் #1 மின்சார காரின் சிறப்புகள்:

இந்த மின்சார காரில் ஒற்றை மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நேரடியாக ரியர் ஆக்ஸில்களை இயக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 268 பிஎச்பி மற்றும் 343 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

இந்த மின் மோட்டாருக்கான மின்சார திறனை வழங்க ஸ்மார்ட் #1 காரில் 66kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பிரத்யேகமாக லித்தியம் நிக்கல் மக்னீசியம் கோபால்டால் உருவாக்கப்பட்டது ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

இந்த பேட்டரியை ஏசி மற்றும் டிசி என இரு விதமான சார்ஜிங் மையங்களிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இவற்றின் சார்ஜ் நேரங்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டுக் காட்சியளிக்கும். ஏசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜை ஏற்ற சுமார் 3 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

அதுவே, டிசி சார்ஜர் வாயிலாக சார்ஜ் செய்யும் போது, அதே 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் திறனிலேயே அது சார்ஜாகும். இதேபோல் அதிக சூப்பரான திறன் இடவசதிக் கொண்ட மின்சார காராகவும் இது காட்சியளிக்கின்றது.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட் #1 இட வசதி

ஸ்மார்ட் #1 எலெக்ட்ரிக் எஸ்யூவி 4,270 மிமீ நீளத்தையும், 1,822மிமீ அகலத்தையும் மற்றும் 1,636 மிமீ உயரத்தையும் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்த அளவுகளை வைத்து பார்க்கையில் இந்த மின்சார கார் அதிக இட வசதிக் கொண்டது தெளிவாக தெரிவிக்கின்றது. இத்துடன், பல விதமான சாலைகளை சமாளிக்கும் பொருட்டு 2,750 மிமீ அளவிலான வீல் பேஸையும் இது கொண்டிருக்கின்றது. மேலும், காரில் கணிசமான அளவில் பொருட்களை ஏற்றிச் செல்லும் விதமாக 411 லிட்டர் அளவில் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் பானெட்டிற்கு கீழே 15 லிட்டர் கொள்ளளவில் இட வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட் #1 டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:

கடந்த ஆண்டு இக்காரை தயாரிப்பு நிறுவனம் கான்செப்ட் மாடலாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதனை அப்படியே பெரியளவில் மாற்றங்கள் இன்றி நிறுவனம் தற்போது தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. முன் மற்றும் பின் பக்கத்தில் மிகவும் சாதாரணமான தோற்றத்துடன் ஸ்மார்ட் #1 உருவாயிருக்கின்றது.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில், லைட் பார் ஹெட்லைட்டை இணைக்கின்ற வகையிலும், இதேபோல் டெயில் லைட்டை இணைக்கின்ற வகையில் லைட் பார் செட்-அப்பும் இக்காரில் காட்சியளிக்கின்றன. முன் பக்கத்தில் பெரிய ஏர் இன்டேக் துளைகள் கொண்ட பம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

மேலும், இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக பெரிய ஆர்ச்சுகள் கொண்ட 19 இன்ச் அலாய் வீல்களும், அதில், 235/45 R19 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களால் காரின் வெளிப்புறம் மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. இதேபோல் காரின் உட்புறத்திலும் மிக சூப்பரான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில், 12.8 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 9.2 அ்ங்குல அகலமான டிரைவர் திரை மற்றும் 10 அங்குல ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்டவை ஸ்மார்ட் #1 காரில் வழங்கப்பட்டுள்ளன. இதில், அதிக கவர்ச்சியான திரையாக இன்ஃபோடெயின் சிஸ்டம் இருக்கின்றது. இதில், பல்வேறு இணைப்பு வசதிகள் மற்றும் ஏர் அப்டேட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட் #1 மின்சார கார் தொழில்நுட்ப அம்சத்தில் மட்டுமில்லைங்க, அது, பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. இக்காரில், லெவல் 2 தன்னாட்சி டிரைவிங் அமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்டாப் அண்ட் கோ வசதிக் கொண்ட அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் ஆகிய அதி நவீன தொழில்நுட்ப வசதிகளும் ஸ்மார்ட் #1 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் #1 மின்சார கார் வெளியீடு... மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்... இதோட முழு ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரியுமா?

இதுதவிர, 7 ஏர் பேக்குகள் அசம்பாவிதங்களின்போது பாதுகாப்பை வழங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. உலகமே மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இத்தகையா சூப்பரான காரை ஸ்மார்ட் நிறுவனம் தற்போது வெளியீடு செய்துள்ளது. இந்த கார் 2023ம் ஆண்டிற்கு பின்னரே உலக நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், இது சந்தேகமே.

More from DriveSpark

Article Published On: Friday, April 8, 2022, 16:32 [IST]
English summary
Smart 1 suv electric car revealed here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+