சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தற்போதைய சூழலில் நகர சாலைகளில் கார் ஓட்டுவது சாதாரண காரியம் கிடையாது. வெளியில் சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை தற்போது அதிகரித்து விட்டது. இது போதாதென்று பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த 2 பிரச்னைகளுக்கும் ஸ்குவாட் மொபிலிட்டி (Squad Mobility) என்ற நிறுவனம் புதிய தீர்வை முன் வைத்துள்ளது. ஆம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக செல்லக்கூடிய சிறிய கார் ஒன்றை ஸ்குவாட் மொபிலிட்டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் உருவத்தில் சிறியதாக இருப்பதால், பார்க்கிங் செய்வதும் எளிமையான விஷயம்.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது மின்சாரத்தால் இயங்க கூடியது. ஆம், இது ஒரு எலெக்ட்ரிக் கார். இந்த காரில் மற்றொரு ஹைலைட்டும் இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்தான் அது. இந்த எலெக்ட்ரிக் காருக்கு தேவையான மின்சாரத்தை இந்த சோலார் பேனல் உற்பத்தி செய்யும்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

சோலார் ஸ்குவாட் (Solar Squad) என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் கேபினுக்கு உள்ளே 2 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே 2 பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய முடியும். பெரிய விண்டோக்கள், ஸ்டைலான சக்கரங்கள் என இந்த எலெக்ட்ரிக் கார் மிக எளிமையாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளுடன், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்களை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். இதுதவிர இந்த காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் தினமும் 20 கிலோ மீட்டர் கூடுதல் ரேஞ்ச் வழங்க கூடியது.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

எனவே தினசரி நகர பயன்பாடுகளுக்கு இந்த எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் என சொல்ல முடியாது. சூரிய வெளிச்சம் இல்லாத நாட்களில் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் 20 கிலோ மீட்டர் கூடுதல் ரேஞ்ஜை பெற முடியாது. ஆம், இந்த 20 கிலோ மீட்டர் கூடுதல் ரேஞ்ச் வானிலையை பொறுத்ததுதான்.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆனால் வழக்கமான மற்ற எலெக்ட்ரிக் கார்களை போலவே, இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியையும் ரெகுலர் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். எனவே சூரிய வெளிச்சம் இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில் பேட்டரியை கழட்டி மாற்றி கொள்ள முடியும். எனவே பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால், மீண்டும் அதனை நிரப்புவதற்கு நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஏற்கனவே சார்ஜ் ஏற்றி வைக்கப்பட்டுள்ள பேட்டரியை மாற்றி கொண்டு நீங்கள் உங்கள் பயணத்தை தொடரலாம். இந்த எலெக்ட்ரிக் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஸ்குவாட் மொபிலிட்டி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி இது 2 இருக்கைகளை மட்டுமே கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் 4 இருக்கைகள் கொண்ட மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருவதாகவும் ஸ்குவாட் மொபிலிட்டி தெரிவித்துள்ளது.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த 4 சீட்டர் மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர்களாக இருக்கும். குறைவான விலையில் கிடைக்கும் இதுபோன்ற சிறிய எலெக்ட்ரிக் கார்கள், நகரங்களின் போக்குவரத்து நெரிசல் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். சோலார் ஸ்குவாட் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ஐரோப்பிய சந்தையில் வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஸ்குவாட் மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 6,500 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 5 லட்ச ரூபாய். இதுதவிர இந்த எலெக்ட்ரிக் காரை குத்தகைக்கு வழங்குவதற்கும் ஸ்குவாட் மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

சொந்தமாக வாங்குவதற்கு பதில் குத்தகைக்கு எடுத்தால், ஒரு மாதத்திற்கு 104 அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக 8 ஆயிரம் ரூபாய். ஐரோப்பாவை தொடர்ந்து, அமெரிக்க சந்தையிலும் சோலார் ஸ்குவாட் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 17, 2022, 13:29 [IST]
English summary
Solar squad electric car official bookings open details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+