“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரினை இளைஞர் ஒருவர் தனது அம்மாவுக்கு பரிசாக வழங்கியுள்ளார். நெட்டிசன்கள் பலரை வெகுவாக கவர்ந்திருக்கும் இந்த நிகழ்வை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

பெற்றோருக்கு பரிசுகளை வழங்குவது பலருக்கு பிடித்த விஷயமாக இருக்கும். அதிலும் இந்தியாவில் பெற்றோர்- குழந்தைகளுக்கு இடையேயான பிணைப்பு இன்னும் வலுவானது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் அவ்வப்போது தங்களது பெற்றோர்களுக்கு சிறு சிறு பரிசுகளை நன்நாளில் வழங்குவது உண்டு.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

இருப்பினும் சொந்தமாக வீடு கட்டி தருவது, நிலம் வாங்குவது என பெரிய பட்ஜெட்டிலான பரிசு சிறு வயதில் இருந்தே கனவாக இருக்கும். இந்த வரிசையில் புதிய காரை வாங்கி கொடுப்பதையும் சேர்த்து கொள்ளலாம். அதாவது, தனது சொந்த பயன்பாட்டிற்கு ஒரு கார் இருக்க, பெற்றொருக்கு தனியாக ஒரு காரை வாங்கி கொடுக்கப்பதும் பலருக்கு ஆசையாக இருக்கலாம். ஆனால் இதனை நிறைவேற்றியவர்கள் என்று பார்த்தால் மிக சிலரே.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

அத்தகையவர்களை அவ்வப்போது நமது ட்ரைவ்ஸ்பார்க் செய்திதளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வகையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ப்ரதீக் என்ற இளைஞர் ஒருவர் தனது தாய்க்கு, சந்தையில் புதியதாக அறிமுகமான டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளார். மென்பொருள் பொறியியலாளரான ப்ரதீக் தனது அம்மாவுக்கு பஞ்ச் காரை பரிசாக வழங்கியுள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

படங்களுடன் பதிவிடப்பட்ட ப்ரதீக்கின் இந்த டுவிட்டர் பதிவில், "எனது அம்மாவுக்கு #டாடா பஞ்ச்-ஐ பரிசாக அளித்தது, எனக்கு ஒரு பெருமையான தருணம். அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனது வசதியை தியாகம் செய்து, இன்று நாம் இருக்கும் நிலைக்கு எங்களை தனியொரு ஆளாக வளர்த்துள்ளார். ஆனால் அது இப்போது முடிகிறது:) குடும்பத்தின் முதல் கார் வந்ததில் மகிழ்ச்சி" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

ப்ரதீக்கின் இந்த டுவிட்டர் பதிவிற்கு டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து மட்டுமின்றி, நெட்டிசன்கள் பலரிடம் இருந்தும் பாராட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த பதிவில், குடும்பத்தின் முதல் கார் என ப்ரதீக் குறிப்பிட்டுள்ளதால், ப்ரதீக்கிடம் சொந்தமாக கார் இல்லை என்றே தோன்றுகிறது.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

இந்த கால மற்ற இளைஞர்களை போல் தனது சந்தோஷத்திற்கான வாகனத்தை வாங்காமல், இத்தனை ஆண்டுகளாக தன்னை வளர்த்த தாய்க்கு காரை பரிசாக வழங்க வேண்டும் என ப்ரதீக்கிற்கு தோன்றியிருப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயமாகும். அதிலும், அவர் தேர்வு செய்துள்ள காரானது ஆட்டோமொபைல் துறையை பற்றிய அவரது அறிவினை காட்டுகிறது. ஏனெனில் இந்திய சந்தையில் பொதுவாகவே டாடா கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்கிற கருத்து உள்ளது.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

இதற்கு உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா கார்களான நெக்ஸான், அல்ட்ராஸ் (இரண்டும் 5-ஸ்டார்), டியாகோ & டிகோர் (இரண்டும் 4-ஸ்டார்) பெற்றுள்ள மதிப்பெண்களே சாட்சியாகும். இந்த வரிசையில் மாடர்ன் டாடா காராக அறிமுகமான பஞ்ச் நெக்ஸான், அல்ட்ராஸ் உடன் இணைந்துள்ளது. ஆம், டாடா பஞ்ச்சிற்கும் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் முழு 5-நட்சத்திரம் கிடைத்துள்ளது.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

இதனால்தான், ப்ரதீக் தனது அம்மாவுக்காக தேர்வு செய்திருப்பது மிக சரியான மற்றும் தரமான, அதேநேரம் மாடர்னான கார் என்கிறோம். ப்ரதீக் வாங்கி இருப்பது பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி மாடலின் ஏஎம்டி கியர்பாக்ஸை கொண்ட கிரியேட்டிவ் என்ற டாப் வேரியண்ட்டாகும். மீட்டியோர் பழுப்பு நிறத்தில் ப்ரதீக் வாங்கியுள்ள பஞ்ச் கிரியேட்டிவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.9.08 லட்சமாக உள்ளது.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

பஞ்ச் கிரியேட்டிவ் வேரியண்ட் உடன் ஐ.ஆர்.ஏ தொகுப்பினை கூடுதல் தேர்வாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்காக கூடுதல் தொகையினை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இந்த தேர்வினை ப்ரதீக் தேர்வு செய்துள்ளாரா அல்லது எதிர்காலத்தில் வாங்கும் திட்டத்தில் உள்ளாரா என்பது குறித்த தகவல்கள் கிடைக்க பெறவில்லை.

“எனது அம்மாவுக்கு பரிசாக புத்தம் புதிய டாடா பஞ்ச் கார்...” - மெய்சிலிர்க்க வைத்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்!!

தற்போதைக்கு பஞ்ச் காரினை ஒரே ஒரு 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son gifted his mother a tata punch micro suv
Story first published: Monday, January 3, 2022, 22:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X