90ஸ் கிட்ஸ்களே ஓடிவாங்க! ப்ளே ஸ்டேஷன் (PS5) பொருத்தப்பட்ட கார் வரப்போகிறது!

பிளே ஸ்டேஷன் பொருத்தப்பட்ட ஒரு காரை சோனி மற்றும் ஹோண்டா நிறுவனம் சேர்த்து உருவாக்கியுள்ளது. இந்த காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போதே பிளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடலாம். இந்த கார் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

சோனி மற்றும் ஹோண்டா நிறுவனம் இணைந்து சோனி ஹோண்டா மொபிலிட்டி என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிறுவனம் அமெரிக்காவில் கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக இந்நிறுவனம் தனது முதல் காராக எலெக்ட்ரிக் கார் ஒன்றைத் தயாரித்துள்ளது. இது குறித்த விரிவாகக் காணலாம் வாருங்கள்.

90ஸ் கிட்ஸ்களே ஓடிவாங்க! ப்ளே ஸ்டேஷன் (PS5) பொருத்தப்பட்ட கார் வரப்போகிறது!

இந்நிறுவனம் 2023ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ள கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோவில் தனது முதல் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் சமீபத்தில் டீஸ் செய்யப்பட்ட வீடியோ வெளியாகிறது. இந்த கார் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி 4ம் தேதி மக்கள் மத்தியில் தோன்றவுள்ளது. பலரும் எதிர்பார்த்த இந்த கார் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த காரை சோனி ஹோண்டா இவி நிறுவனம் வரும் 2026ம் ஆண்டு முதல் வட அமெரிக்கா பகுதியில் விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் இந்த காரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா போக இந்த கார்களை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அங்கும் வரவேற்பு இருந்தால் அங்கேயே விற்பனையைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காரில் மிக முக்கிய அம்சமாக இந்த காருக்குள்ளேயே சோனி நிறுவனத்தின் பிளே நிலையம் 5 பொருத்தப்பட்ட காராக இது உருவாகவுள்ளது. இது போக இந்த கார் லெவல் 3 ஆட்டோனமஸ் அம்சங்களுடன் இந்த கார் இருக்கிறது. இன்று மார்கெட்டில் பெரும்பாலும் லெவல் 2 அட்டோனமஸ் கார்களே விற்பனையாகி வரும் நிலையில் இந்த கார் லெவல் 2 அட்டோனஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காருக்கான விற்பனைக்கு பிறகான சர்வீஸை சோனி நிறுவனம் செய்யுமா அல்லது ஹோண்டா நிறுவனம் செய்யுமா என்ற விஷயம் இன்னும் உறுதியாகவில்லை. இந்த காருக்கான புக்கிங் மற்றும் விற்பனை 2025ம் ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு முடிவு அல்லது நிச்சயமாக 2026ம் ஆண்டு இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90ஸ் கிட்ஸ் பெரிதும் விரும்பும் பிளே ஸ்டேஷனை ஒரு முக்கிய அம்சமாக வைத்து ஒரு கார் வெளியாவது பலரை வியக்க வைத்துள்ளது. இந்த கார் இந்தியாவிற்கு வருமா வராதா என்பது சந்தேகம் தான்.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2022, 18:41 [IST]
English summary
Sony honda joint venture made first electric car with inbuilt play station
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+