ஐபிஎல் போட்டியில் காரை ஏலம் விட திட்டம்... இதுக்காக காசிரங்கா பதிப்பை பிரத்யேகமாக உருவாக்கிய டாடா!
ஐபிஎல் போட்டியில் ஏலம் விடுவதற்காக பிரத்யேகமாக 'காசிரங்கா எடிசன்' எனும் சிறப்பு பதிப்பை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் காராக மாறியிருக்கின்றது டாடா பஞ்ச் கார். இந்த மைக்ரோ எஸ்யூவி மட்டும் கடந்த மாதம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றது. இந்த உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையின் காரணத்தினால் நிறுவனத்தின் இரண்டாம் அதிகம் விற்பனையாகும் காராக அது மாறியுள்ளது.

நெக்ஸான் கார் மாடலே நிறுவனத்தின் முதல் அதிகம் விற்பனையாகும் காராக காட்சியளிக்கின்றது. இவை இரண்டுமே மிக அதிக பாதுகாப்பான கார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் காரில் ஓர் சிறப்பு பதிப்பை உருவாக்கியிருப்பதாகவும், அதனை ஐபிஎல் 2022-இன்போது ஏலத்தில் விற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனம், டாடா பஞ்ச் காரில் 'காசிரங்கா எடிசன்' (Tata Punch Kaziranga Edition) எனும் சிறப்பு பதிப்பையே உருவாக்கியிருக்கின்றது. முற்றிலும் பிரத்யேகமான வாகனமாக இதனை உருவாக்கியிருக்கின்றது. வழக்கமான பஞ்ச் காருடன் ஒப்பிடுகையில் பல்வேறு மாறுபட்ட அம்சங்களுடன் இது காட்சியளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படத்தை இன்று அதிகாரப்பூர்வ நிறுவனம் வெளியிட்டது. இது வெளியாகிய அடுத்த கணமே இக்காரை பிரத்யேகமாக 2022 ஐபிஎல் ஏலம் விட இருப்பதாக அறிவித்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமே 2022 ஐபிஎல்-இன் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஆகும். இதன் அடிப்படையிலேயே இதுவரை எந்தவொரு நிறுவனம் செய்திராத ஓர் காரியத்தை ஐபிஎல் மைதானத்தில் நிகழ்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதற்காக ஒரே ஒரு பச்சை நிற காசிரங்கா எடிசன் பதிப்பை நிறுவனம் தயார்படுத்தியிருக்கின்றது. இதனையே 2022 ஐபிஎல்-இல் ஏலம் விட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏலத்தின் வாயிலாக கிடைக்கும் வருவாயை காசிரங்காவின் மேம்பாட்டு பணிகளுக்கு வழங்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கின்றது.

ஏற்கனவே கூறியதை போலவே டாடா பஞ்ச் ஓர் மிக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராகும். பெரியவர்களின் பாதுகாப்பில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு ஸ்டார் ரேட்டிங்கையும் இக்கார் பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும் அது காட்சியளிக்கின்றது.

7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் தானியங்கி வைப்பர்கள் உள்ளிட்ட அம்சங்கள் டாடா பஞ்ச் காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ஐஆர்ஏ கார் இணைப்பு தொழில்நுட்பமும் அதில் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரட்டை ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட மற்றும் பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், அதிக பாதுகாப்பான மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனமாக பஞ்ச் காட்சியளிக்கின்றது.

இந்த காரணத்தினால்தான் இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த சூப்பரான டிமாண்டிற்கு இக்காரின் குறைவான விலையும் ஓர் காரணமாக இருக்கின்றது. டாடா பஞ்ச் தற்போது ரூ. 5.64 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது விற்பனைக்கு வந்தபோது ரூ. 5.49 என்ற விலையிலேயே விற்பனைக்கு கிடைத்தது.

சமீபத்திய விலை உயர்வின் காரணத்தினால் தற்போது சற்றே அதிக விலையுடன் பஞ்ச் விற்கப்பட்டு வருகின்றது. இதன் உயர்நிலை தேர்வு ரூ. 8.98 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது இந்த கார் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு எஞ்ஜினில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இந்த எஞ்ஜின் 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றது. இத்துடன், சிட்டி மற்றும் ஈகோ எனும் இரு விதமான ரைடிங் மோட்களும் இக்காரில் வழங்கப்படுகின்றன.

இதுதவிர மிக விரைவில் இக்காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டர்போசார்ஜட் எஞ்ஜினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அல்ட்ராஸ் காரில் இடம் பெர்ரு வரும் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரே பஞ்ச் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகை பற்றிய துள்ளியமான தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








