இந்த காரை மாற்று திறனாளிகள் கூட யார் துணையும் இல்லாமல் ஓட்டலாம்... இது எப்படி சாத்தியம்
மினி நிறுவனம் கூப்பர் காரின் எலெக்டரிக் வெர்ஷனை மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் கஸ்டைமஸ் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

பிஎம்டபிள்யூ க்ரூப் நடத்தி வரும் பிராண்ட் தான் மினி, இந்த பிராண்டில் உள்ள மினி கூப்பர் கார் மிகவும் பிரபலம். இந்நிலையில் அந்நிறுவனம் மினி கூப்பர் காரின் எலெக்ட்ரிக் வேரியன்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் மினி கூப்பர் SE எனப் பெயரிட்டுள்ளது.

பொதுவாக கார்கள் எல்லாம் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருந்துவந்தது. பைக் கூட கால் இல்லாதவர்களால் பயன்படுத்தப்படும் ஸ்கூட்டர் மற்றும் பைக் வந்துவிட்டது. ஆனால் கார்களில் அப்படியான எந்த காரும் பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் மினி நிறுவனம் தனது மினி கூப்பர் SE காரனை மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் படி வடிவமைக்கத் திட்டமிட்டது.

இந்த முயற்சியில் மினி நிறுவனம் வெற்றியும் பெற்றுள்ளது என்றே சொல்லலாம். மினி கூப்பர் SE எலெக்டரிக் காரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமான கஸ்டமைசேஷனை உருவாக்கியுள்ளது. அதன்படி சிறிய ரக கார்கள் இப்படியாக கஸ்டமைசேஷன் உருவாவது இதுவே முதன் முறை.

இதன்படி மினி கூப்பர் SE எலெக்டரிக் காரை மாற்றுத் திறனாளிகள் வாங்கினார். அவர்களுக்கான கஸ்டைமஸ்சேஷனை மினி நிறுவனமே பெற்றுத்தரும். இதைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகளே எந்த பிரச்சனையும் இன்றி அந்தக்காரை ஓட்டிச்செல்ல முடியும். மற்றவர்கள் உதவி இல்லாமல் இந்த காரில் எல்லா வேலைகளையும் அவர்களே செய்து கொள்ள முடியும்.

மினி கூப்பர் SE எலெக்ட்ரிக் காரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கஸ்டமைசேஷனில் ஸ்டியரிங் வீல் உடன் உட்புறமாக ஒரு வீல் பொருத்தப்பட்டிருக்கும். அதைப் பயன்படுத்தி காரை ஆக்ஸிலரேட் செய்யலாம். அதே வீலை பயன்படுத்தி பிரேக்கும் பிடித்துக்கொள்ளலாம்.

இதை அந்நிறுவனம் ஆக்ஸிலரேட்டர் ரிங் சிஸ்ம் என அழைக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் கைகளை மட்டும் பயன்படுத்தியே இதை இதை இயக்க முடியும். உட்புறம் கொடுக்கப்பட்ட ரிங்கில் கையால் அழுத்தம் கொடுப்பது மூலமே இந்த ரிங்கை இயக்க முடியும்.

இந்த கஸ்டமைசேஷன் கால் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் தான். கை இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத மாற்றுத் திறனாளிகளால் இதைப் பயன்படுத்த முடியும். இது மட்டுமல்ல இந்த ரிங் ஆக்ஸிலரேஷன் சிஸ்டம் ஸ்விட்ச் மூலம் ஆப் செய்ய முடியும்.

மேலும் இந்த ரிங் ஆக்ஸிலரேஷன் என்பது கடும் டிராபிக் தேவைப்படும் குறைவான ஆக்ஸிலரேஷன் மற்றும் சிறப்பான பிரேக்கிங் சிஸ்டத்தையும் சப்போர்ட் செய்யும் வகையில் பிரேக் பெடல் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகள் சுலபமாக ஏறி இறங்க வசதியும் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








