ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

ஆஸ்டரின் கேபினை கிட்டத்தட்ட அப்படியே கொண்ட 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் காரினை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் அறிமுகத்தை இந்த 2022 பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் எம்ஜி-யின் எலக்ட்ரிக் மாடலாக விளங்கும் இசட்.எஸ் இவி-யின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டாக விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய கார் விளங்குகிறது.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், தற்போது மீண்டும் மேற்கொள்ளப்பட்ட இந்த அப்டேட் செய்யப்பட்ட எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை கீழே காணலாம்.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இந்த ஸ்பை படங்கள் காரின் உட்புற கேபினின் தோற்றத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற கேபின் கிட்டத்தட்ட ஆஸ்டரை ஒத்து காணப்படுகிறது. எம்ஜி பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்களுள் ஒன்றுதான் ஆஸ்டர் ஆகும்.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

Source: Team BHP

புதிய இசட்.எஸ் இவி மாடல் அதன் மைய கன்சோல் பகுதிக்கு மேலே செவ்வக வடிவில் ஏசி காற்று துளைகளை பெற்றுள்ளது. இதற்கு கீழே ஏசி-க்கான கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட கண்ட்ரோல்களை கொண்ட 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பே ஆஸ்டரிலும் வழங்கப்படுகிறது.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இவ்வளவு ஏன், ஸ்டேரிங் சக்கரம் கூட ஆஸ்டரில் இருப்பதை போன்றே உள்ளது. இந்த ஸ்டேரிங் சக்கரத்திலும், மைய கன்சோல் பகுதியிலும் சிவப்பு நிற தையல்களை பார்க்க முடிகிறது. இத்துடன் இசட்.எஸ் இவி-யின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும் பெற்றுவரவுள்ளது. உட்புறத்தில் டேஸ்போர்டும், கதவுகள் பேனல்களும் கார்பன்-ஃபைபர் போன்றதான ஃபினிஷிங்கை கொண்டுள்ளன.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

அத்துடன், ஆஸ்டரில் வழங்கப்படும் சில தொழிற்நுட்பங்களை இந்த எலக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்கும். இந்த வகையில் எலக்ட்ரானிக் பவர் ஸ்டேரிங், பனோராமிக் சன்ரூஃப், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், மடக்கும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை, பிஎம் 2.5 காற்று வடிக்கட்டி, ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் பல்வேறு யுஎஸ்பி சார்ஜிங் துளைகளை இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டின் கேபினிலும் எதிர்பார்க்கிறோம்.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இவற்றுடன் போஸ்ச் நிறுவனத்தின் அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களையும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரலாம் என்பதை இந்த ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிகிறது. ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, வாகனம் பாதை மாறுவதை எச்சரிக்கும் வசதி, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியினை காட்டும் வசதி, பாதையை மாற்ற உதவி, ரிவர்ஸில் வரும்போது குறுக்காக வேறொரு வாகனம் வருவதை எச்சரிப்பான் உள்ளிட்டவை இந்த அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பில் அடங்குகின்றன.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இவை மட்டுமின்றி, தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கமாக கார் மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிப்பான், தானியங்கி அவசரகால ப்ரேக்கிங், அதிவேகம் எச்சரிப்பான் மற்றும் இண்டெலிஜண்ட் ஹெட்லேம்ப் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் ADAS-இல் அடங்குகின்றன. இத்தகைய அம்சங்களுடன் புதியதாக 51kWh பேட்டரி தொகுப்பை புதிய இசட்.எஸ் இவி மாடலில் எதிர்பார்க்கிறோம்.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இது அதிகப்பட்சமாக 480கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லக்கூடியதாக வழங்கப்பட உள்ளது. தற்சமயம் விற்பனையில் எம்ஜி இசட்.எஸ் இவி-இல் 44.5kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இது முழு சார்ஜில் 419கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. உட்புற கேபினில் மட்டுமின்றி, ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்பதால் இசட்.எஸ் இவி மாடலின் முன்பக்கமும் நன்கு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்டரின் கேபின் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இதன்படி, எல்இடி டிஆர்எல்-களை கொண்ட மெல்லிய ஹெட்லேம்ப்கள் உடன் புதுமையாக வெற்றிடமான முன்பக்கத்தை இந்த எம்ஜி எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஏற்றுவரவுள்ளது. அதேபோல் முன்பக்க & பின்பக்க பம்பர்களின் டிசைனும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மேலும் பின்பக்கத்தில் புதிய எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, January 31, 2022, 14:58 [IST]
English summary
Spy pics reveals all new zs ev facelift to get new interiors similar to astor suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+