இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

இயக்கத்தின்போது காற்றை சுத்தம் செய்யும் சூப்பரான வசதியுடன் ஓர் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த தரமான கார்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அதிசயமிகு வசதிக் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கின்றனர். அந்த வாகனம் இயக்கத்தின்போது காற்றை தூய்மைப்படுத்துமாம். எய்ந்தோவன் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி-யைச் சேர்ந்த மாணவர்களே இந்த சூப்பரான மின்சார காரை உருவாக்கியவர்கள் ஆவார்கள்.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

இந்த காருக்கு ஜெம் நெட் ஜீரோ (Zem Net Zero) என அவர்கள் பெயர் சூட்டியிருக்கின்றனர். முன் மாதிரி மாடலாகவே இது உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் தனித்துவமே கார்பன்-டை ஆக்ஸைடை உட்கொள்வதுதான். ஆம், மரங்கள்போன்று இது CO2-வை உறிஞ்சிக் கொள்ளும். இதனை மீண்டும் சுத்தமான காற்றாக அது வெளியேற்றும். இதற்கான பிரத்யேக ஃபில்டர்கள் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் காற்றை வடிகட்டும் வசதியுடன் காரை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வாகனம் முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த காரின் வடிவமைப்பிலும்கூட மாணவர்கள் கார்பன் உற்பத்தியை தவிர்த்தலை கையாண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே காரின் மோனோகாக் சேஸிஸ் மற்றும் பாடி பேனல்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

இதேபோல், காரின் உட்பகுதியில் மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்காரின் கேபினையும் மாணவர்கள் நவீன காலத்திற்கு உகந்ததாக உருவாக்கியிருக்கின்றனர். குறிப்பாக, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் அம்சங்கள் அனைத்தும் மிக சிறப்பான வசதிகளுடன் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

22 kWh மின் மோட்டார் ஜெம் நெட் ஜீரோ எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இழக்கப்படும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுக்கும் விதமாக வழங்கப்பட்டிருக்கின்றது. இதனுடனேயே கார்பன்-டை ஆக்ஸைடை வடிகட்டக் கூடிய ஃபில்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை முன்பக்க ஏர்-டேம்கள் பின்னாடி பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

இதிலேயே காற்று நேரடியாக சென்று வடிக்கட்டப்படும். இந்த சிஸ்டம் ஒவ்வொரு 20 ஆயிரம் மைல் பயணத்திற்கும் 2 கிலோ வரையில் கார்பன்-டை ஆக்ஸைடை வடிக்கட்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், இந்த காரின் ஹூட் மற்றும் ரூஃப் ஆகிய பகுதிகளில் சோலார் பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

ஆம், இக்காரை சார்ஜ் செய்ய தனியாக சார்ஜிங் மையம் தேவையேப்படாது. சூரிய ஒளி ஒன்று இருந்தால் போதும், அன்றாட பயணங்களுக்கான மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே எலெக்ட்ரிக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனை 35 நபர்கள் கொண்ட மாணவர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

மாணவர்கள் இந்த மின்சார வாகனத்திற்கான காப்புரிமையைப் பெறவில்லை. ஆகையால், முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் யாரேனும் இந்த மின் வாகனத்தைத் தழுவி விரைவில் அவர்களின் தயாரிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது உலகளவில் மின் வாகனங்கள் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

ஆகையால், ஏதேனும் ஓர் நிறுவனம் நிச்சயம் இந்த வாகனத்தை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், ஒரு சில நிறுவனங்கள் சோலாரில் இயங்கும் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் சோனோ மோட்டார்ஸ் அதன் சியோன் சோலார் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணியைத் தொடங்கியது.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

இந்த காரில் ஒட்டுமொத்தமாக 456 சோலார் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக சுமார் 112 கிமீ தூரம் வரை பயணிக்க கூடிய மின்சார திறனை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் சூரிய ஒளியின் உதவியின் வாயிலாக மட்டுமே கிடைக்கக் கூடிய ரேஞ்ஜின் விபரம் ஆகும். இத்துடன் ஓர் முழுமையான சார்ஜில் 305 கிமீ பயணிக்கும் திறனை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு... எல்லாரும் இதைதான் வாங்குவாங்க... ஏன் நீங்ககூட இதை வாங்க நேரிடலாம்!

சோனோ சியோன் சோலார்

இந்த காருக்கே தற்போது புக்கிங்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இதுவரை 19 ஆயிரம் முன் பதிவுகள் இக்காருக்கு குவிந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவிற்காக 2,225 யூரோக்கள் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் ஐந்து பேர் பயணிக்கக் கூடிய சோலார் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: TU/ecomotive

More from DriveSpark

Article Published On: Saturday, September 17, 2022, 16:29 [IST]
English summary
Students created electric car that cleans air while driving
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+