புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

அப்டேட் செய்யப்பட்ட 2023 சுஸுகி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஜப்பான் நாட்டில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய வேகன்ஆர் மாடலை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய பயணிகள் கார்கள் என்று எடுத்து பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் வேகன்ஆரின் பெயரும் இருக்கும். ஏனெனில் நம் நாட்டில் வேகன்ஆர் போன்ற மலிவான விலை கொண்ட கார்களை வாங்குவோரே அதிகமாக உள்ளனர். அதுமட்டுமின்றி, வேகன்ஆர் அளவில் நன்கு உயரமானதாக வடிவமைக்கப்படுகிறது.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

இது காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சவுகரியமான உட்புற கேபினை வழங்குவதால், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையிலான வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலேயே சந்தையில் வேகன்ஆர் காரை அவ்வப்போது மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்து விடுகிறது. இந்த வகையில் 2022 வேகன்ஆர் மாடல் கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

ரூ.5.4 லட்சத்தில் இருந்து ரூ.7.1 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வேகன்ஆர் தோற்றம், தொழிற்நுட்பங்கள், சவுகரியம், பாதுகாப்பு மற்றும் செயல்படுதிறன் என அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுவந்தது. அதுமட்டுமில்லாமல், புதிய பெயிண்ட் தேர்வுகளும் 2022 வேகன்ஆர் காருக்கு வழங்கப்பட்டன.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

இந்த நிலையில் 2023 சுஸுகி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை அந்த நாட்டில் 1,217,700 யென்-இல் இருந்து 1,509,200 யென் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.7.22 லட்சத்தில் இருந்து ரூ.8.96 லட்சம் வரையில் ஆகும்.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

ஸ்டாண்டர்ட் வேகன்ஆர் கார் மட்டுமின்றி, வேகன்ஆர் ஸ்டிங்ரே மற்றும் வேகன்ஆர் கஸ்டம் இசட் வெர்சன்களிலும் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இவை அதிகப்பட்சமாக 1,811,700 யென் (ரூ.10.75 லட்சம்) வரையிலான விலைகளில் அங்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான அப்கிரேட் என்று பார்த்தால், புதிய க்ரில் மற்றும் பம்பர் உடன் காரின் முன்பக்கம் கவனிக்கத்தக்க அளவில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் டைப் ஏ/ டைப்-சி யுஎஸ்பி பவர் சாக்கெட், கீலெஸ் புஷ்-ஸ்டார்ட் சிஸ்டம், மற்றும் தானியங்கி ஏசி உள்ளிட்டவை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

ஹீட்டட் ஓட்டுனர் இருக்கை ஆனது புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அப்டேட். இது காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. உட்புற கேபின் முழுவதுமாக கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

ஜப்பானில் வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய வேகன்ஆர் கார் டேஸ்போர்டின் மத்தியில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் முழு-அகல ஏசி பேனலை கொண்டுள்ளது. தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பானது சுஸுகியின் கனெக்ட் இணைப்பு ப்ளாட்ஃபாரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், முன் இருக்கை பயணிகளுக்கு எஸ்.ஆர்.எஸ் பக்கவாட்டு ஏர்பேக்குகள், எஸ்.ஆர்.எஸ் ஜன்னல் கண்ணாடி ஏர்பேக்குகள், வாகனத்தின் வேகத்தை கண்காணிப்பான், தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், வாகனம் பாதை மாறுவதை எச்சரிப்பான் மற்றும் இரவில் பாதசாரிகளை அடையாளம் காணுவான் முதலியவை புதிய வேகன்ஆரில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

இதில் பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்கள் வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்டின் அனைத்து வேரியண்ட்களிலும் கொடுக்கப்படுமாம். ஸ்டாண்டர்ட் வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு மொத்தம் 10 விதமான நிறத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரம், வேகன்ஆர் ஸ்டிங்ரே மற்றும் வேகன்ஆர் கஸ்டம் இசட் மாடல்கள் 6 மற்றும் 8 விதமான நிறத்தேர்வுகளை மட்டுமே பெற்றுள்ளன.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

ஜப்பானிய வேகன்ஆர் காரில் 660சிசி என்ஜின் ஆனது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் என இரு விதமான தேர்வுகளில் வழங்கப்படுகிறது. அதேநேரம் இதே 660சிசி என்ஜினின் டர்போ வெர்சன் ஸ்டாண்டர்ட் மாடலை தவிர்த்து வேகன்ஆர் ஸ்டிங்ரே மற்றும் கஸ்டம் இசட் என மற்ற இரண்டிலும் கொடுக்கப்படுகிறது.

புதிய வேகன்ஆர் கார் வேற லெவலில் இருக்கு!! இந்தியாவில் எப்போ தான் அறிமுகமாகுமோ!

5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படும் வேகன்ஆர் கார் ஜப்பானில் 2-சக்கர-ட்ரைவ் தேர்வில் மட்டுமில்லாமல், 4-சக்கர-ட்ரைவ் தேர்விலும் கிடைக்கிறது. மிக சிறந்த மைலேஜாக 25.2kmpl ஆனது சிவிடி கியர்பாக்ஸ் உடன் மைல்ட்-ஹைப்ரிட் என்ஜினை பயன்படுத்தும்போது கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 3, 2022, 11:41 [IST]
English summary
Suzuki introduced 2023 model wagonr facelift with a fresh look
மேலும்... #சுஸுகி #suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+