கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காரை பெறவிருக்கும் அதிர்ஷடசாலியாக தென்-ஆப்பிரிக்கர்கள் மாறியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

மாருதி சுசுகி நிறுவனம் அண்மையில் புதிய தலைமுறை செலிரியோ (Maruti Suzuki Celerio) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் தற்போது இந்திய பட்ஜெட் வாகன விரும்பிகளின் விருப்பமான தேர்வாக மாறியிருக்கின்றது. பட்ஜெட் வாகன பிரியர்களை மட்டுமின்றி அதிகம் மைலேஜை எதிர்பார்ப்போர்களின் மனம் கவரும் கவர்ந்த வாகனமாகும் அது மாறியிருக்கின்றது.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

இந்த மாதிரியான ஓர் சூப்பர் காரையே மாருதி சுசுகி நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் விற்பனைக்குக் களமிறக்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிகம் மைலேஜ் தரும் புதிய தலைமுறை செலிரியோ காரை தென்-ஆப்பிரிக்கா சந்தைக்கு மாருதி சுசுகி ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

சர்வதேச சந்தைக்கான செலிரியோவும், இந்திய சந்தைக்கான செலிரியோவும் தோற்றத்தில் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. ஆகையால், அவை வித்தியாசங்கள் இன்றி காணப்படுகின்றன. இதேபோல் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 66 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறன் கொண்டது.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இந்தியாவில் சிஎன்ஜி தேர்விலும் செலிரியோ ஹேட்ச்பேக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், தென்-ஆப்பிரிக்காவில் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வுக் கொண்ட செலிரியோ மட்டுமே தற்போது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் சிஎன்ஜி செலிரியோவும் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என யூகிக்கப்படுகின்றது.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

புதிய செலிரியோ பன்முக சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாக காட்சியளிக்கின்றது. 7 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 15 இன்ச் அலாய் வீல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ஓஆர்விஎம்கள், பின் பக்கத்தில் வைப்பர் என எக்கசக்க அம்சங்களை மாருதி வழங்கியிருக்கின்றது.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

இத்தகைய ஓர் சிறப்பு மிக்க வாகனத்தையே தென் ஆப்பிரிக்கர்களுக்காக இந்தியாவில் இருந்து மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்ய அனுப்பி வைத்திருக்கின்றது. புதிய மாருதி சுஸுகி செலிரியோ கார் ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகின்றது. இத்தகைய மிக சிறப்பான மைலேஜ் திறனினால் இந்தியாவின் அதிகம் மைலேஜ் வழங்கும் பெட்ரோல் காராக செலிரியோ மாறியிருக்கின்றது.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

இதைவிட பன்மடங்கு அதிகம் மைலேஜ் தரும் தேர்வாக சிஎன்ஜி செலிரியோ இருக்கின்றது. அது ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 35.60 கிமீ வரை மைலேஜ் தருகின்றது. இது வழக்கமான செலிரியோவைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும். செலிரியோ எஸ்-சிஎன்ஜி எனும் பெயரில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

வழக்கமான செலிரியோ சென்னையில் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், சிஎன்ஜி எஞ்ஜின் கொண்ட செலிரியோ 6 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்ககப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஏற்கனவே இந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ காருக்கு மிக அதிகளவில் புக்கிங் குவிந்து வருகின்றது. தெளிவாகக் கூற வேண்டும் என்றால் விற்பனைக்கு வந்த இரண்டே மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கைகளை அக்கார் குவித்தது.

கொடுத்து வச்சவங்க... இந்தியாவின் மலிவு விலை கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம்... மைலேஜ் ரொம்ப ரொம்ப அதிகம்!

மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை செலிரியோ காரை கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி அன்றே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே, அதாவது, நாட்டில் அமோகான விற்பனை கிடைத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தற்போது தென்-ஆப்பிரிக்கா சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 10:59 [IST]
English summary
Suzuki launched made in india celerio in south africa market
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+