விற்பனையிலேயே இல்லாத இந்த காருக்கு புது அப்டேட்டை செய்த மாருதி! என்ன நடக்கபோதுன்னு பொருத்திருந்து பாப்போம்
மாருதிசுஸூகி நிறுவனம் தனது எஸ்-கிராஸ் காரில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக ஹைபிரிட் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் தனது எஸ்-கிராஸ் காரை இந்தியாவில் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது. ஆனால் இந்த காரை இன்னும் அந்நிறுவனம் தயாரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்த காரை இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டிற்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

இந்நிலையில் மாருதி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வேறு வெளியிட்டது. இந்நிலையில் தற்போது அடுத்த அப்டேட்டாக இந்த காரின் ஹைபிரிட் வெர்ஷனை உருவாக்கியுள்ளது.

மாருதி சுஸூகி நிறுவனம் இந்த காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதற்காக மாருதி நிறுவனம் தற்போது ஹைபிரிட் ஆப்ஷனை வரிசையாகத் தனது ஒவ்வொரு கார்களிலும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

அதன்படி தற்போது இந்த எஸ்-கிராஸ் காரிலும் கொண்டு வந்துள்ளது. இந்த ஹைபிரிட் இன்ஜின் ஆட்டோ அல்லது மேனுவல் கியர் ஆப்ஷன் உடன் வருகிறது. இதில் ஆட்டோ கியர் ஆப்ஷனில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் ஸ்னோ மற்றும் லாக் மோட்கள் இருக்கிறது.

இதில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பொருத்தவரை 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 129 எச்பி பவரையும் 235 எம்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சம் 195 கி.மீ வேகத்திலும், 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.5 நொடியில் பிக்கப் செய்து விடும்.

ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்தை பொருத்தவரை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜினை பொருத்தவரை 115 எச்பி பவர் மற்றும் 138என்எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கியரை கண்ரோல் செய்ய பெடல் ஸிஃப்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 175 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாகப் பயணிக்கும் 0-100 கி.மீ வேகத்தை 12.7 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.

இந்த காரின் சர்வதேச வேரியன்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி புரோஜெக்டர் ஹைட்லைட்கள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் இன்ஜின் மற்றும் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இது மட்டுமல்ல இந்த காரில் முன்பக்க சீட் ஹீட்டட் சீட்டாகவும், பாதுகாப்பிற்காக பார்க்கிங் சென்சார், 7 ஏர்பேக், பிளானட் ஸ்பார்ட் மானிட்டரிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டிராஃபிக் சைன் ரெகனேஷன், ஆகிய வசதிகளும் இந்த காரில் இருக்கிறது.

இந்த காரின் டாப் வேரியன்டாக ஆல் கிரிப் எனப்படும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது. 17 இன்ச் அலாய் வீல்கள், லெதர் சீட்,9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், பானேரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








