தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. சொகுசு கார்களுக்கே இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ டஃப் கொடுக்கும்போல!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிஐ க்ளீன் மொபிலிட்டி அதன் மோந்த்ரா (Ti Clean Mobility Montra) எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை இந்திய சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனம் டிஐ க்ளீன் மொபிலிட்டி (Ti Clean Mobility). சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் முருகப்பா குழுமத்தின் (Murugappa Group) ஓர் அங்கமாக இந்நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே மோந்த்ரா (Montra) எனும் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் அறிமுகத்தின் வாயிலாக இந்திய மின் வாகன உலகில் தனது கால் தடத்தைப் பதித்திருக்கின்றது முருகப்பா குழுமம்.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை சென்னை அம்பத்தூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு வைத்தே நிறுவனம் அதன் அனைத்து மின் வாகனங்களையும் உற்பத்தி செய்ய இருக்கின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோவும் இங்கு வைத்தே உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

அறிமுக விலையாக புதிய மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சாவிற்கு ரூ. 3.02 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மானியத்திற்கு பிறகான எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார ஆட்டோவாக இதனை டிஐ க்ளீன் மொபிலிட்டி உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, எக்கசக்கமான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஆட்டோவாகவும் இந்த ஆட்டோ உருவாக்கப்பட்டிருக்கின்றது.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், வழக்கமான ஆட்டோக்களின் தோற்றங்களில் இருந்து பல மடங்கு மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. ஹெட்லைன், விண்ட்ஸ்கிரீன், மேற்கூரை, முகப்பு பகுதி மற்றும் பின் பக்கம் என அனைத்தும் அட்டகாசமான தோற்றத்தில் அது உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த ஆட்டோ தனிநபர் பயன்பாட்டாளர்களையும் வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் இதன் வசீகரிக்கும் தோற்றம் தனிநபர் பயன்பாட்டாளர்களையும் மோந்த்ராவை வாங்கத் தூண்ட செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் 10 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 197 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டாரே மோந்த்ராவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

இது, 60 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இதுதவிர பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் பொருட்டு மிக உறுதியான மெட்டீரியல்களைக் கொண்டு இந்த ஆட்டோவை உருவாக்கியிருப்பதாக முருகப்பா குழுமம் தெரிவித்துள்ளது. இத்துடன், சூப்பரான கம்ஃபோர்ட் வசதிக்காக டபுள்-ஃபோர்க் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன், கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற மிகவும் மிருதுவான குஷன் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

ஆகையால், காரில் பயணிக்கும் அனுபவத்தை இந்த ஆட்டோவில் பயணிகளால் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது. கூடுதல் தொழில்நுட்ப வசதியாக எலெக்ட்ரிக் ஆட்டோவில் பார்க் அசிஸ்ட் மோட் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன் பெரிய பூட் ஸ்பேஸ், டெலிமேட்டிக்ஸ் மற்றும் செயலி வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆட்டோவை ஆண்டுக்கு 75 ஆயிரம் யூனிட்டுகள் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

மேலும், ஆட்டோவைத் தொடர்ந்து முருகப்பா குழுமம் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் மற்றும் கனரக வணிக வாகனங்களையும் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதில், எலெக்ட்ரிக் டிராக்டரை செலஸ்டியல் எகட் (Cellestial Egat) பிராண்டிலும், கனரக வாகனங்களை ரைனோ 5536 (Rhino 5536) பிராண்டிலும் தயாரிக்க உள்ளது.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

புதிய தயாரிப்புகள் அடுத்த ஆறு மாதங்களில் வெளியீடு செய்யப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் மூன்று உற்பத்தி ஆலைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒன்று சென்னை அம்பத்தூரிலும், மற்றொன்று சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையிலும், மூன்றாவது ஒன்று டெல்லி-என்சிஆரிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழக நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. வெளிநாட்டு தயாரிப்புங்களுக்கே டஃப் கொடுக்கும்போல!!

நிறுவனம் சமீபத்தில் (ஆகஸ்டு மாதம்) மின் வாகன பிரிவில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை செய்வதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே நிறுவனம் தற்போது மின்சார ஆட்டோவை வெளியீடு செய்திருக்கின்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளிலும் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

குறிப்பு: புதிய மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ வழக்கமான ஆட்டோக்களிடம் இருந்து எந்தளவு மாறுபட்டு உள்ளது என்பதை வெளிக்காட்டும் விதமாக வழக்கமான ஆட்டோக்களின் படங்கள் இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 7, 2022, 9:34 [IST]
English summary
Tamilnadu based ti clean mobility launched montra e auto at rs 3 02 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+