சூப்பரோ சூப்பர்... இந்த வண்டியை மின்சார வெர்ஷனில் கொண்டு வர போகுதா டாடா !! ரொம்ப ஃபேமஸான வண்டிங்க!!
மின்சார வெர்ஷனில் உருவாக்கப்பட்டுள்ள டாடா ஏஸ் எலெக்ட்ரிக் (Tata Ace Electric) கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

"சரக்கு ஏத்திட்டு போகணும், ஒரு வண்டிய பிடிப்பா" அப்படினு யாராச்சும் நம்ம கிட்டு வந்து சொன்னாங்கனா. நம்மில் பலர் ஒரு குட்டி யானைய கூப்பிடட்டுமானுதான் கேப்போம். அந்த அளவிற்கு குட்டி யானைன்ற வார்த்தை மக்கள் மத்தியில் ஃபேமஸானதாக இருக்கின்றது. குட்டி யானை எந்த வாகனத்தை குறிக்கும் என்பதை நாங்கள் கூற வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கின்றோம்.

ஏனெனில், டாடா ஏஸ்தான் அந்த குட்டி யானை என்பது பலருக்கு தெரியும். இத்தகைய ஓர் ஃபேமஸான வாகனத்தையே டாடா நிறுவனம் மின்சார வெர்ஷனுக்கு அபிகிரேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் டாடா ஏஸ் வாகனத்தின் மின்சார வெர்ஷன் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது.

விளம்பரத்திற்காக வாகனத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த போதே அது ஸ்பை செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கின்றது. இதனை முன்னிட்டே டாடா ஏஸ் இவி வெர்ஷனின் விளம்பர வீடியோ படமாக்கப்பட்டு வருகின்றது. அதாவது, விற்பனைக்கு வர டாடாவின் இந்த செயல் டாடா ஏஸ் இவி வெர்ஷனின் அறிமுகத்திற்கு இன்னும் நீண்ட நாட்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் இட்ரியோ மற்றும் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் உள்ளிட்ட நிறுவனங்களே டாடா ஏஸ் மினி லோடு வேனை தங்களின் கை வணத்தில் மின்சார வாகமான மாற்றியிருந்தன. இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸே இவ்வாகனத்தை எலெக்ட்ரிக் வெர்ஷனில் உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.

டாடா நிறுவனம் ஏஸ் மினி லோடு வேனை மின்சார வெர்ஷனில் உருவாக்குவது இது முதல் முறையல்ல. பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே டாடா ஏஸை ஐரோப்பிய சந்தைக்காக மின்சார வெர்ஷனில் டாடா உருவாக்கியது. லீட் அசிடேட் பேட்டரி பேக் கொண்ட டாடா ஏஸே அவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

ஆனால், இந்திய சந்தைக்காக உருவாகி வரும் டாடா ஏஸ் மின்சார வேனில் லித்தியம் அயன் பேட்டரி பேக் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதுமட்டுமில்லைங்க இந்த வேன் என்ன மாதிரியான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்கிற தகவலும்கூட இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால், இதுகுறித்த விபரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் 18kWh மற்றும் 20kWh பேட்டரி பேக் தேர்வுகளில் டாடா ஏஸ் இவி விற்பனைக்குக் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓர் முழுமையான சார்ஜில் 120 கிமீ முதல் 150 கிமீ ரேஞ்ஜ் வசதியுடனும் அது விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

டாடா ஏஸ் இசி எஞ்ஜின் கொண்ட வாகனம் பற்றி விபரம்:
ஐசி எஞ்ஜின் கொண்ட டாடா ஏஸில் 2 சிலிண்டர் 700 சிசி நேச்சுரல்லி அஸ்பைரேடட் இன்ஜெக்சன் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரையும், 45 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், வாட்டர் கூல்டு 694 சிசி பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் டாடா ஏஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுமட்டுமின்றி சிஎன்ஜி தேர்விலும் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவர் மற்றும் 50 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இத்தகைய சூப்பரான தேர்வுகளிலேயே டாடா மோட்டார்ஸ் ஏஸ் வாகனத்தை தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இத்துடன் சேர்த்து விரைவில் மின்சார வெர்ஷனையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. டாடா ஏஸ் கோல்ட், கோல்ட் சிஎக்ஸ் மற்றும் எச்டி ப்ளஸ் என மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 3.97 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
குறிப்பு: முதல் இரு படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








