குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

குட்டி யானை என செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸ் வர்த்தக வாகனத்தின் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏஸ் எலெக்ட்ரிக் (Tata Ace EV) வர்த்தக வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டாடா ஏஸ் வர்த்தக வாகனம் முதல் முறையாக கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது டாடா ஏஸ் வர்த்தக வாகனத்தின் எலெக்ட்ரிக் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தில், எவோஜென் இவி பவர்ட்ரெயின் (Evogen EV Powertrain) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார், 36.2 பிஹெச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் டாடா ஏஸ் வர்த்தக வாகனத்தில் லிக்யூட்-கூல்டு ஐபி67 சான்றளிக்கப்பட்ட லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொகுப்பு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். எனவே பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகன உரிமையாளர்கள் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

புதிய டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தின் நீளம் 3,800 மிமீ ஆகும். அதே நேரத்தில் இதன் அகலம் 1,500 மிமீ ஆகவும், உயரம் 2,635 மிமீ ஆகவும் உள்ளது. மறுபக்கம் டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தின் வீல் பேஸ் நீளம் 2,100 மிமீ என்பதும், டர்னிங் ரேடியஸ் 4.3 மீட்டர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

அதே நேரத்தில் டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தின் எடை 1,840 கிலோ ஆகும். இந்த எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 160 மிமீ ஆக உள்ளது. முதல் முறையாக கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, சரக்கு போக்குவரத்து துறையில் டாடா ஏஸ் புரட்சியை ஏற்படுத்தியது.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

தற்போது 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், எலெக்ட்ரிக் வடிவத்தில் டாடா ஏஸ் வர்த்தக வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் வடிவத்திலும் டாடா ஏஸ் வர்த்தக வாகனம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கே மற்றொரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தை தற்போது வெளியிட மட்டுமே செய்துள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. நடப்பு 2022ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில்தான் ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

அதாவது நடப்பாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். விற்பனைக்கு கொண்டு வரப்படும் சமயத்தில்தான் அதிகாரப்பூர்வ விலையும் அறிவிக்கப்படும். டாடா ஏஸ் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனம், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்களை, அதாவது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய மாடல், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல், டாடா அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வரும் மாதங்களில் தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் தயாரிப்புகள் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

இதில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல்தான் முதலாவதாக வரவுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல் வரும் மே 11ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் வரிசையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

குட்டி யானையை எலெக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகம் செய்த டாடா... சிங்கிள் சார்ஜில் எவ்ளோ தூரம் ஓடும் தெரியுமா?

இதுதவிர வெகு சமீபத்தில் கர்வ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மற்றும் அவின்யா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இவை அடுத்த ஒரு சில ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கமர்ஷியல் எலெக்ட்ரிக் வாகனங்கள் என இரண்டு பிரிவுகளிலும் வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன.

Article Published On: Thursday, May 5, 2022, 17:24 [IST]
English summary
Tata ace ev unveiled here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+