இனி சர்வீஸில் குறை சொல்ல முடியாது... டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அதிரடி... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சர்வீஸ் விஷயத்தில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்காக, அதாவது கார்களுக்காக, கடந்த 2021-22ம் நிதியாண்டில், புதிதாக 160 சர்வீஸ் ஒர்க் ஷாப்களை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது செயல்பாட்டில் உள்ள சர்வீஸ் ஒர்க் ஷாப்களின் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர EzServe என்ற புதிய சர்வீஸ் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது டூவீலர்கள் மூலம் செய்யப்படும் சர்வீஸ் கான்செப்ட் ஆகும். அதாவது டூவீலர்களில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று சர்வீஸ் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்கள் இல்லாத சர்வீஸ் அனுபவம் உறுதி செய்யப்படும். இதை இலக்காக வைத்துதான் புதிய EzServe சர்வீஸ் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த EzServe சர்வீஸ் கான்செப்ட் மூலம், பேஸிக் சர்வீஸ்களை, அதாவது அடிப்படையான சர்வீஸ்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்தில் இந்த சேவை வழங்கப்படும். EzServe சர்வீஸ் சேவையில் பயன்படுத்தப்படும் டூவீலர்களின் பின் பகுதியில், 3 பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இதில், சர்வீஸ் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் இருக்கும்.

ஸ்பேர் பார்ட்ஸ்கள், வாக்கம் க்ளீனர் போன்ற உபகரணங்கள் இந்த பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். டூவீலர்களில் சர்வீஸ் செய்ய வருபவர்கள் முறையான அடையாள அட்டைகளையும் வைத்திருப்பார்கள். EzServe சர்வீஸ் கான்செப்ட் மூலம், வாடிக்கையாளர்களுக்கு விரைவான சர்வீஸ் சேவையை வழங்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்புகிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என்பதுடன், அதிகரித்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கும் இந்த EzServe சர்வீஸ் சேவை உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்வார்கள். விற்பனைக்கு பின்பான சர்வீஸ் எப்படி உள்ளது? என்பதும் வாடிக்கையாளர்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக உள்ளது. எனவேதான் இந்த EzServe சர்வீஸ் சேவை டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தற்போது நம்பர்-1 இடத்தில் இருந்து கொண்டிருப்பதற்கு, நாடு முழுவதும் பரவி காணப்படும் அதன் பிரம்மாண்டமான சர்வீஸ் நெட்வொர்க், மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையை சிறப்பாக வழங்குவதற்கு தேவையான முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில், டிகோர், டியாகோ, பன்ச், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்வதுடன், தொடர்ந்து பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுதவிர அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் மாடலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியலில் இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








