உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

டாடா மோட்டார்ஸின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக விளங்கும் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் முதன்முதலாக 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினை நேரடியாக எதிர்க்கொள்ளும் அல்ட்ராஸில் தற்போதுவரையில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வை மட்டுமே டாடா நிறுவனம் வழங்கி வருகிறது.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இதனால் புதிய அப்கிரேடாக அல்ட்ராஸில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படலாம் என சமீப நாட்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் இதனை டாடா நிறுவனம் உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இதுகுறித்த அந்த பதிவில், "வணக்கம், எங்களுக்காக எழுதியதற்கு நன்றி. அல்ட்ராஸின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விரைவில் கிடைக்கும். தகுந்த நேரத்தில் #திகோல்டுஸ்டாண்டர்ட் கிடைப்பதை அறிவிப்போம். புதிய அப்டேட்களுக்கு எங்களது வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களுடன் இணைந்திருங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 108 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய டர்போ-பெட்ரோல் என 3 விதமான என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

ஆனால் மற்ற முன்னணி பிராண்ட்களின் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் காரணமாக பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வகையில் அல்ட்ராஸ் கூடுதல் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது என்றாலும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு இல்லாதது இந்த காரின் ஒரு குறையாக பார்க்கப்பட்டது.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

ஆனால் இதுவும் மிக விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் நிவர்த்தி செய்யப்பட உள்ளது. இதனால் வரும் மாதங்களில் அல்ட்ராஸின் விற்பனை உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு மறைப்புமின்றி சில அல்ட்ராஸ் கார்கள் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காராகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இல்லையென்றால், அவை அல்ட்ராஸ் சிஎன்ஜி கார்களுக்கான சோதனை ஓட்டங்களாக இருக்கலாம். ஏனெனில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் புதியதாக ஆட்டோமேட்டிக் தேர்வை அறிமுகப்படுத்தவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. இருப்பினும், அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் அறிமுகத்திற்கு பிறகே அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் அறிமுகம் இருக்கும் என தெரிகிறது.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

டாடா அல்ட்ராஸின் அடையாளமே, உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் இந்த கார் பெற்றுள்ள முழு 5 நட்சத்திரங்களே ஆகும். அல்ட்ராஸ் மட்டுமின்றி, மற்ற பிரபலமான டாடா கார்களான நெக்ஸான் மற்றும் பஞ்ச் மாடல்களும் இந்த மோதல் சோதனைகளில் முழு நட்சத்திரங்களை பெற்றிருப்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இதில் இருந்து டாடா கார்களின் பாதுகாப்பு தரத்தை பற்றி அறியலாம்.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

அல்ட்ராஸிற்கு விற்பனையில் முக்கியமான போட்டி மாடலாக விளங்கும் ஐ20-க்கு மூன்றாம் தலைமுறை அப்கிரேடை ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2020 மார்ச் மாதத்தில் வழங்கி இருந்தது. இதனால் இதன் விற்பனை தற்போதைக்கு பெரிய அளவில் சரிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களை கூடுதலாக கவர, ஐ20 என் காரினை இந்த தென்கொரிய நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

உறுதியானது!! டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகை - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

அதேபோல் மாருதி சுஸுகியும் அதன் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு முக்கியமான அப்கிரேடினை வழங்க தயாராகி வருகிறது. இதனால் அல்ட்ராஸில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை சேர்ப்பதற்கு இது சரியான தருணமே. இந்த புதிய வேரியண்ட்டில், விரைவான கியர் மாற்றத்திற்காக டிசிடி கியர்பாக்ஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Tata Altroz Automatic Launch Confirmed.
Story first published: Tuesday, January 4, 2022, 22:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X