அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

மாருதி சுஸுகி நிறுவனத்தை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ். இது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற கார் ஆகும். ஆனால் சமீப காலமாக டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. மறுபக்கம் இதன் போட்டி கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகியவைதான் டாடா அல்ட்ராஸ் காரின் மிக முக்கியமான போட்டியாளர்கள் ஆகும். இந்த 2 கார்களின் விற்பனையும் மிகவும் சிறப்பாக உள்ள நிலையில், அல்ட்ராஸ் காரின் விற்பனை குறைந்து கொண்டே வருவது டாடா நிறுவனத்தை சிந்திக்க வைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை டாடா வகுத்துள்ளது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் கார் 2 பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைத்து வருகிறது. இந்த சூழலில் அல்ட்ராஸ் காரில் புதிய சிஎன்ஜி ஆப்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. அத்துடன் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

இதில், புதிய சிஎன்ஜி வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனமும் வெகு விரைவில் பலேனோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன் குறித்த தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். இந்த புதிய மாடலில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

அதே நேரத்தில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் பல்வேறு வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலில், பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

அதே சமயம் ரெகுலர் அல்ட்ராஸ் காரின் டிசைனை போன்றேதான், புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் டிசைனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ரெகுலர் மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு சில மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

பிரத்யேகமான கலர் ஆப்ஷன்கள் மற்றும் வெளிப்புறத்தில் புதிய பேட்ஜ்கள் மூலமாக ரெகுலர் மாடலில் இருந்து புதிய சிஎன்ஜி மாடல் வேறுபடுத்தி காட்டப்படலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அல்ட்ராஸ் காரின் புதிய சிஎன்ஜி மாடலை இந்திய சாலைகளில் சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. எனவே அடுத்த 2-3 மாதங்களில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷனை தொடர்ந்து, எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு வெர்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும் இந்தியாவின் ஒரு சில கார்களில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் காரும் வெகு விரைவில் மாறவுள்ளது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், மாற்று எரிபொருட்களில் இயங்கும் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

அப்படிலாம் விட்ற மாட்டோம்... மாருதியை ஒரு கை பார்த்து விடும் முடிவில் டாடா... ஸ்கெட்ச் போட்டுட்டாங்க!

எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அத்துடன் ஏராளமான புதிய ஹைப்ரிட் கார்களும் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 16, 2022, 23:55 [IST]
English summary
Tata altroz cng things you should know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+