அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் கார் தொடர்பான புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் அல்ட்ராஸ் ஆகும். இந்த வகையில் அல்ட்ராஸ் அறிமுகம் செய்யப்பட்டு 2 வருடங்கள் நிறைவு அடைந்துவிட்ட நிலையில், இந்த ஹேட்ச்பேக் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் தயாராகி வருகிறது.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

முன்னதாக அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் விற்பனைக்கு வருமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது முன்பதிவுகளை துவங்கி இந்த காரின் வருகையை டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரில் வழங்கப்பட உள்ள ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்பினை தயாரிப்பு நிறுவனம் டிசிஏ (இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக்) என அழைக்கிறது.

இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த கார் தொடர்பான டீசர் வீடியோவின் மூலம் இந்த புதிய அல்ட்ராஸ் காரில் டிரான்ஸ்மிஷன் தேர்வை தவிர்த்து மற்ற எதிலிலும் மாற்றம் இருக்காது என்பது தெரிய வருகிறது. இருப்பினும் புதிய பெயிண்ட் தேர்வு அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காருக்கு வழங்கப்படும். சமீபத்தில் இணையத்தில் வெளியாகியிருந்த ஸ்பை படங்கள் இந்த புதிய நிறத்தேர்வானது அடர் நீலமாக இருக்கும் என்பதை வெளிக்காட்டி இருந்தன.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

அதேநேரம் தற்சமயம் அல்ட்ராஸிற்கு வழங்கப்படும் மற்ற நிறத்தேர்வுகளிலும் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கிடைக்கும். டார்க் எடிசன் உள்பட. இதேபோல் அல்ட்ராஸை பல்வேறு விதமான வேரியண்ட்களில் டாடா நிறுவனம் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கிறோம். அதாவது டாப் வேரியண்ட்களான எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்+ மட்டுமின்றி மத்திய நிலை வேரியண்ட்டான எக்ஸ்டி -யிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கலாம்.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

ஆனால் அல்ட்ராஸின் ஐ-டர்போ வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கிடைக்காது என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ட்ராஸ் ஐ-டர்போ கார் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான அல்ட்ராஸ் காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

இதனுடன் மட்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்பட உள்ளது. இதனை காட்டிலும் ஆற்றல்மிக்க ஐ-டர்போ வேரியண்ட்டிற்கு ஏன் வழங்கப்படவில்லை என்பது தெரியவில்லை. அல்ட்ராஸ் டிசிஏ வேரியண்ட்டிற்கு போட்டியளிக்கும் விதமாக ஏற்கனவே மாருதி சுஸுகி பலேனோ ஏஎம்டி, ஹூண்டாய் ஐ20 டிசிடி, ஃபோக்ஸ்வேகன் போலோ ஆட்டோமேட்டிக் மற்றும் ஹோண்டா ஜாஸ் சிவிடி போன்ற ஆட்டோமேட்டிக் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் உள்ளன.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

இந்த பிரிவில் ஹூண்டாய் ஐ20-க்கு பிறகு டிசிடி கியர்பாக்ஸை பெற்றுவரவுள்ள 2வது மாடலாக டாடா அல்ட்ராஸ் விளங்கவுள்ளது. இத்தகைய இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேரர்வை டிஎஸ்ஜி என்கிற பெயரில் போலோ ஹேட்ச்பேக் காரில் வழங்குவதை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எப்போதோ நிறுத்திவிட்டது. இவ்வாறு மற்ற ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் இருந்தாலும், பயணிகள் பாதுகாப்பில் தர மதிப்பீடு டாடா அல்ட்ராஸிற்கு அனுகூலமாக இருக்கும்.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

ஏனெனில் முதல் இந்திய காராக டாடா அல்ட்ராஸ் உலகளாவிய என்சிஏபி (NCAP) மோதல் சோதனைகளில் முழு ஐந்து நட்சத்திரங்களை பெற்றது. ஆனால் அதன்பின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 புள்ளிகள் அடிப்படையில் அல்ட்ராஸை முந்தியது வேறு கதை. மணிக்கு 64kmph வேகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் அல்ட்ராஸிற்கு பெரியவர்கள் பாதுகாப்பில் 17க்கு 16.13 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 29 புள்ளிகளும் வழங்கப்பட்டன.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

டாடா அல்ட்ராஸின் அனைத்து வேரியண்ட்களிலும் 2 காற்றுப்பைகள் நிலையான தேர்வாக வழங்கப்படுகின்றன. முன்பக்கமாக மற்றும் பக்கவாட்டாக ஏற்படுத்தப்பட்ட மோதல்களில் காரின் ஓட்டுனர் மற்றும் துணை பயணிகளின் தலை, கழுத்து மற்றும் கால் முட்டி பகுதிகள் மிகவும் பாதுகாக்கப்படுவதாக உலகளாவிய என்சிஏபி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா!! புக்கிங் நடைபெறுகிறது!

அதேபோல் பயணிகளின் மார்பு பகுதிகளும் போதுமான பாதுகாப்பை பெறுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், இபிடி மற்றும் கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், முன் இருக்கை பயணிகள் சீட்பெல்ட் அணியாததை எச்சரிக்கும் வசதி, அதிவேகத்தை எச்சரிப்பான் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி உள்ளிட்டவை அல்ட்ராஸின் வேரியண்ட்கள் அனைத்திலும் வழங்கப்படுகின்றன. விரைவில் இந்த பாதுகாப்பை ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனும் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 5, 2022, 14:34 [IST]
English summary
Tata Altroz DCA dual-clutch automatic transmission teaser out [Video]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+