இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள அல்ட்ராஸ் காரானது, பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது ஆகும். மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 ஆகியவை டாடா அல்ட்ராஸ் காரின் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

டாடா அல்ட்ராஸ் காரில் தற்போதைய நிலையில் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகளை டாடா அல்ட்ராஸ் கார் பெற்றுள்ளது. ஆனால் நேற்று வரை அல்ட்ராஸ் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே ஒரு கியர் பாக்ஸ் தேர்வை மட்டுமே வழங்கி வந்தது.

இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

அது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு இல்லாதது, டாடா அல்ட்ராஸ் காரின் மிகப்பெரிய குறையாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த குறையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நிவர்த்தி செய்துள்ளது. ஆம், டாடா அல்ட்ராஸ் காரில் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (Dual Clutch Automatic) கியர் பாக்ஸ் தேர்வு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

இது சுருக்கமாக 'டிசிஏ' (DCA) என குறிப்பிடப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலின் ஆரம்ப விலை 8.10 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி ஏற்கனவே தொடங்ப்பட்டு விட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் மொத்தம் 6 வண்ண தேர்வுகளில் கிடைக்கும். அவை பின்வருமாறு:

  • காஸ்மோஸ் பிளாக்
  • அவென்யூ ஒயிட்
  • ஆர்கேட் க்ரே
  • டவுன்டவுன் ரெட்
  • ஹார்பர் ப்ளூ
  • ஒபேரா ப்ளூ
  • இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

    அதே நேரத்தில் டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் மொத்தம் 7 வேரியண்ட்களில் கிடைக்கும். XMA+, XTA, XZA, XZA (O), XZA+, XTA Dark மற்றும் XZA+ Dark என 7 வேரியண்ட்களில், டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் வழங்கப்படுகிறது.

    இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

    வேரியண்ட்கள் வாரியான விரிவான விலை விபரத்தை நீங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். டாடா அல்ட்ராஸ் காரின், 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 85 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

    இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

    1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், புதிய ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தவிர, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வும் தொடர்ந்து வழங்கப்படும். அதே நேரத்தில் டாடா அல்ட்ராஸ் காரின் எஞ்சிய 2 இன்ஜின் தேர்வுகளுடனும், அதாவது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகளுடன், தொடர்ந்து 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படும்.

    இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

    இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும், ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படாது. இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பு 2022ம் ஆண்டிலேயே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுக்காகதான் காத்து கிடந்தோம்! பாதுகாப்பான காரில் இருந்த குறையை நீக்கிய டாடா! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

    இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு, அதாவது 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நடப்பு 2022ம் ஆண்டில் நடைபெற வேண்டிய ஆட்டோ எக்ஸ்போ, கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக தாமதமாகி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

Article Published On: Monday, March 21, 2022, 12:43 [IST]
English summary
Tata altroz dca dual clutch automatic launched in india here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+