போட்டி மாடல்களை சமாளிக்குமா புதிய அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் கார்? பலேனோ ஏஎம்டி vs ஐ20 டிசிடி vs அல்ட்ராஸ் டிசிஏ
கிட்டத்தட்ட 2 வருட வடிவமைப்பிற்கு பிறகு ஒருவழியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ராஸ் டிசிஏ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கான எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.09 லட்சங்களில் இருந்து ரூ.9.89 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எக்ஸ்டி, எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்+ என்கிற 3 விதமான ட்ரிம் நிலைகளில் இந்த புதிய அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. வழக்கமான மேனுவல் வெர்சன்களுடன் ஒப்பிடுகையில் அல்ட்ராஸின் இந்த புதிய ஆட்டோமேட்டிம் ட்ரிம் நிலைகளின் விலைகள் கிட்டத்தட்ட ரூ.1.07 லட்சங்கள் வரையில் அதிகமாக கொண்டுவரப்பட்டுள்ளன.

| Variant | Altroz MT | Altroz DCA
| Difference |
| XT | ₹7,52,900 | ₹8,59,900 | ₹1,07,900 |
| XM+ | ₹7,02,900 | ₹8,09,900 | ₹1,07,900 |
| XZ | ₹8,02,900 | ₹9,09,900 | ₹1,07,900 |
| XZ (O) | ₹8,14,900 | ₹9,21,900 | ₹1,07,900 |
| XZ+ | ₹8,52,900 | ₹9,59,900 | ₹1,07,900 |
| XT Dark | ₹7,98,900 | ₹9,05,900 | ₹1,07,900 |
| XZ+ Dark | ₹8,82,900 | ₹9,89,900 | ₹1,07,900 |
அதேநேரம் வழக்கமான ட்ரிம் நிலைகளை போல் புதிய அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரினையும் டார்க் எடிசனில் வாங்கலாம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அல்ட்ராஸ் டிசிஏ காருக்கான முன்பதிவுகளை டாடா நிறுவனம் ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாகவும், டீலர்ஷிப்களின் வாயிலாகவும் ஏற்க துவங்கிவிட்டது. இதற்கான முன்தொகையாக ரூ.21,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது அல்ட்ராஸின் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்குமாம். 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுடன் புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த விபரங்கள் தற்போதைக்கு இல்லை. அல்ட்ராஸ் மாடலில் மற்றொரு டிரான்ஸ்மிஷன் தேர்வாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டாடாவின் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸுக்கு விற்பனையில் ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி பலேனோ உள்ளிட்ட ஹேட்ச்பேக் மாடல்கள் போட்டியாக விளங்குகின்றன. இதில் குறிப்பாக பலேனோ முக்கியமான போட்டியாக அல்ட்ராஸ் டிசிஏ காருக்கு விளங்கும். ஏனெனில் தற்சமயம் அல்ட்ராஸை காட்டிலும் பலேனோ கார்களே ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
| Variant | Altroz DCA
| Baleno AMT
| Variant |
| XTA | ₹8,59,900 | ₹8,59,000 | Zeta |
| XMA+ | ₹8,09,900 | ₹7,69,000 | Delta |
| XZA | ₹9,09,900 | ₹9,49,000 | Alpha |
| XZA (O) | ₹9,21,900 | ||
| XZA+ | ₹9,59,900 | ||
| XTA Dark | ₹9,05,900 | ||
| XZA+ Dark | ₹9,89,900 | ||

மாருதி பலேனோவில் டெல்டா, ஸீட்டா & ஆல்ஃபா என்கிற 3 ட்ரிம் நிலைகளில் மட்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஆரம்ப நிலை சிக்மா வேரியண்ட்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படுவதில்லை. 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் கே12என் ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

மற்றொரு போட்டி ஹேட்ச்பேக் மாடலான ஹூண்டாய் ஐ20-இல் அஸ்டா ஐஎம்டி, அஸ்டா ஐவிடி, அஸ்டா (O) ஐவிடி, ஸ்போர்ட்ஸ் டிசிடி, ஸ்போர்ட்ஸ் ஐவிடி, அஸ்டா டிசிடி மற்றும் அஸ்டா (O) டிசிடி என அல்ட்ராஸ் போல் அதிக ட்ரிம் நிலைகளில் ஆட்டோமேட்டிக் தேர்வு வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த ஹூண்டாய் காரில் ஐவிடி & டிசிடி என இரு விதமான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
| Variant | Altroz DCA
| i20 AT | Variant |
| XTA | ₹8,59,900 | ₹9,99,990 | Asta IMT |
| XMA+ | ₹8,09,900 | ₹8,78,600 | Sportz IMT |
| XZA | ₹9,09,900 | ₹9,95,000 | Asta IVT |
| XZA (O) | ₹9,21,900 | ₹10,51,500 | Asta (O) IVT |
| XZA+ | ₹9,59,900 | ₹9,76,000 | Sportz DCT |
| XTA Dark | ₹9,05,900 | ₹8,90,000 | Sportz IVT |
| XZA+ Dark | ₹9,89,900 | ₹10,81,000 | Asta DCT |
| ₹11,33,500 | Asta (O) DCT |

1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் & 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மேலும், ஐ20-இல் ஐஎம்டி என பிரத்யேகமான மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த 3 பிரீமியம்-ஹேட்ச்பேக் கார்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இவை மூன்றிலும் டீசல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications








