தங்கத்தை மீண்டும் களமிறக்கிய டாடா... இந்த சந்தோஷமான தகவலுடன் ஓர் கவலையளிக்கும் செய்தியும் வெளியிட்டிருக்காங்க!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் தங்க நிறத்திலான அல்ட்ராஸ் (Altroz) ஹேட்ச்பேக் காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மகிழ்ச்சியான தகவலுடன் சேர்த்து ஓர் அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவலையும் டாடா மோட்டார் தற்போது வெளியிட்டிருக்கின்றது. இவை குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் அல்ட்ராஸும் ஒன்று. இது ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். இக்காரில் பிரீமியம் அம்சங்கள் மிக ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. பிரீமியம் அம்சங்கள் மட்டுமில்லைங்க இது ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காரும்கூட. ஆம், பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை இந்த கார் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த தரமான ரேட்டிங்கை டாடா அல்ட்ராஸ் பெற்றது.

இந்த கார் கிடைத்து வந்த தங்க நிற தேர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது. இந்த அகற்றம் அக்கார் பிரியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாடா அல்ட்ராஸின் பிரீமியம் தோற்றத்தை பல மடங்கு அதிகரித்துக் காண்பிக்கும் நிற தேர்வாக இது இருந்துவந்தது. இந்த நிலையிலேயே இனி அல்ட்ராஸில் கோல்டன் நிற வழங்கப் போவதில்லை அண்மையில் டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை நிறுவனம் தற்போது பின் வாங்கியிருக்கின்றது. அதாவது, மீண்டும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்கில் தங்க நிற தேர்வை விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்த கையோடு மற்றுமொரு அதிரடி நடவடிக்கையையும் இதே கார் மாடல் சார்ந்து டாடா மோட்டார்ஸ் எடுத்திருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் அல்ட்ராஸ்கார் மாடலில் கிடைக்கும் தேர்வுகளை மறுசீரமைப்புச் செய்திருக்கின்றது.

இந்த மறுசீரமைப்பு பணியின்கீழ் நிறுவனம் நான்கு வேரியண்டுகளை விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது. நீக்கப்பட்டிருக்கும் வேரியண்டுகளில் ஒன்று பெட்ரோல் எஞ்ஜின் தேர்வாகும். மற்ற அனைத்தும் டீசல் வேரியண்டுகளாகும்.
தேர்வுகளின் விபரம் இதோ:
பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு:
- எக்ஸ்இசட்ஏ (ஓ) - XZA (O)
- XE (எக்ஸ்இ)
- XZ Dark (எக்ஸ்இசட் டார்க்)
- XZ (O) (எக்ஸ்இசட் ஓ)

டீசல் எஞ்ஜின் தேர்வு:
இந்த அல்ட்ராஸ் வேரியண்டுகளையே டாடா நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது.

இந்த தேர்வுகள் அகற்றப்பட்டிருக்கும் அதேவேலையில் புதிதாக எக்ஸ்டி டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுகூடவேதான் நிறுவனம் ஹை ஸ்ட்ரீட் கோல்டு நிற தேர்வையும் மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த வண்ண நீக்கத்தால் ஒபெரா ப்ளூ, ஆர்கேட் கிரே, டவுண்டவுன் ரெட், அவென்யூ ஒயிட், காஸ்மோ பிளாக் மற்றும் ஹார்பர் ப்ளூ ஆகிய நிற தேர்வுகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

தற்போது இவற்றில் மீண்டும் கோல்டன் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. டாடா அல்ட்ராஸ் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல், டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மோட்டார்களுடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி மோட்டார் தேர்வுகளும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. இதுதவிர, அதிக பிரீமியம் வசதிகளுடன் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹர்மன் ஸ்பீக்கர் மற்றும் ட்வீட்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் அல்ட்ராஸில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுதவிர, அதிக குளிர்ச்சியான சூழலை வழங்கக் கூடிய ஏசி சிஸ்டம், ஹெட்லேம்ப், வைப்பர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, டர்ன்-பை-டர்ன் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒரே டச்சில் விண்டோக்களைக் கையாளும் வசதி என உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் வழங்கப்படுகின்றது. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 5.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்கேக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications